பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 'கிண்டர் கார்டன், தொடக்கப் பள்ளிகளில் வேலே செய்யும் ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் ஆறு நூறு மார்க்குகள் முதல் எண்ணுாறு மார்க்கு கள் வரை இருக்கும். பல்கலைக் கழக பேராசிரியர் களுக்கு இரண்டாயிரம் முதல் மூவாயிரம் மார்க்கு கள் வரை மாதச் சம்பளமாகும். நான்கு பங்கே: அதற்குமேல் இல்லை." ஆம். சமதர்ம முறை என்ருலே சம்பள விகி தங்களின் ஏற்றத் தாழ்வுகளே மட்டங்தட்டுவது தானே' என்று கூறிச் சமாளித்துக் கொண்டோம். பள்ளிக்கூடங்களில் என்னென்ன பாடங் களேச் சொல்லிக் கொடுக்கிரு.ர்கள்? எம்மொழிகளில் சொல்லிக் கொடுக்கிருர்கள்? முதல் வகுப்பில் தாய் மொழியாகிய ஜெர்மன் மொழி, கணக்கு, படம் வரைதல், இசை, விளை யாட்டு, கை வேலை ஆகியவை இடம்பெறுகின்றன. ஐந்தாம் வகுப்பில் இரஷ்வழிய மொழி கற்பிக்கத் தொடங்குகிறர்கள். இது கட்டாயம். ஏழாம் வகுப்பிலிருந்து, ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், போலிஷ் ஆகிய ஏதாவதொரு மொழி கற்பிக்கப் படுகிறது. இதில் ஒன்றை, விருப்பம்போல் கற் றுக் கொள்ளலாம். பூகோளமும் வரலாறும் ஐந்தாவது வகுப்பிலே தான் தொடங்குகிருர்கள். உயிரியலும் ஐந்தாம் வகுப்பில் தொடக்கம்.