பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பெளதிகம் கற்பிக்கிருர்களா? ஆரும் வகுப்பி லிருந்து கற்பிக்கிருர்கள். வேதியல் தனிப்பாடமா? ஆம். ஏழாம் வகுப்பி லிருந்து தொடங்குகிறது. குடிமை தொடங்கு வதும் ஏழாவதில். உண்மையான தொழிற் பயிற்சி தொடங்குவதும் அங்கிலையில். பத்தாவது வகுப்பில் வானியல் தொடங்கு கிருர்கள் என்று கேள்விப்பட்டு வியக்தோம். அங் கிலை நமக்கு எப்போது வரும் என்று பெருமூச்சு விடாதீர்கள். ஆசிரியர்களே ஆசிரியர்களாக இருக் கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்களே, மாணவர்களாகவே இயங்க விடுங்கள். பிள்ளை யைச் சேர்த்ததோடு பெற்ருேர் கடமை முடிந்த தாகக் கருதாதீர்கள். கல்விக் கூடங்களோடு முறை யான நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, கல்வி வளர்ப்பிற்கும் சீரமைப்பிற்கும் கெம்பு மரங்களாக விளங்குங்கள். வயிறு, இரு வேளை உணவை ஒரு போது ஏற்றுக்கொள்ளுமா? கொள்ளாது. முளையும் ஒரு போது அளவோடே ஏற்றுக்கொள்ளும். கல்வி பற்றிய ஏராளமான தகவல்களே ஏற். றுக் கொண்டு திண்டாடினுேம். பொது உறவு அலுவலருக்கு நன்றி சொல்லும் சாக்கில் இக்திபா ל". வின் கல்வி வளர்ச்சியைப்பற்றி சிறிது பேசி னேன்.