பக்கம்:புதிய தமிழகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 புதிய தமிழகம்

என்று கூறியிருத்தலாலும், நம்மாழ்வார், 'பிறவி மாமாயக் கூத்தினேயே," என்று கூறியிருத்தலாலும், கி. பி. 9-ஆம் நூற்றண்டிலும் நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன என்பதை நன்கறியலாம்.

கி. பி. 10-ஆம் நூற்ருண்டில் தோன்றிய சிவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கிறது என்று கூறி யுள்ளது காணத்தகும்:

"இளைமையங் கழனிச் சாயல் ஏருழு

தெரிபொன் வேலி வளே முயங் குருவ மென்முேன்

வரம்புபோய் வனப்பு வித்திக் கிளேநாம் பிசையுங் கூத்தும் கேழ்த்

தெழுந் தீன்ற காம வினபயன் இனிதிற் றுய்த்து வீணே

வேந் துறையு மாதேர்." -2598

"நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைக் தோண்டியும்.........இவ்வாறு பிறரை ஐம்பொறியால் துகராமல் தடுத்து யாமும் துகர்ச்சியைக்கைவிட்டோம்.” எனவரும் வாக்கியம், சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்டவல்லது.

'நாடக நயந்து காண்பார் நலங்கிளர்

கண்கள் சூன்றும்'

-முத்தியிலம்பகம், 2989

இவற்ருல் சிந்தாமணி எழுதப்பெற்ற கி. பி. 10-ஆம் நூற்றுண்டில் நாடகங்கள் தமிழ் நாட்டில் நடிக்கப் பெற்றன என்னும் உண்மையை உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/16&oldid=641888" இலிருந்து மீள்விக்கப்பட்டது