பக்கம்:புதிய தமிழகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் இராசமாணிக்கனும் 63

என்னும் குறளின் விளக்கங்தான் இது. இவ்வாறு உயிரினும் சிறந்த ஒழுக்கத்தை வற்புறுத்தும் குறள் கள் பல. வாழ்க்கைக்கு இன்றியயைாத இத்தகைய உய ரிய கருத்துக்களைப் பின்பற்றி நடத்தல் அறிவுபடைத்த மக்கள் கடமையாகும் என்பதில் ஐயமுண்டோ?

ஐந்து அவித்தான் மெய், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐம்புலன் களால் நுகரப்படும் ஊறு, சுவை, ஒளி, ஓசை நாற்றம் என்னும் ஐந்து புலன்களையும் வென்றவன் 'ஐந்து அவித்தான்” என்று சொல்லப்படுவான். அவனது ஆற்றல் மிகப்பெரியது. ஐந்தவித்த பெரியோன் உல கில் தோன்றுவானுயின்,இந்திரன் அரியண்மீது இடப் பட்டுள்ள பாண்டுகப்பளம் அசையும். உடனே இந்திரன் உண்மை யுணர்ந்து எழுந்து நிற்பான்; தன்னைச் சூழ வுள்ள தேவர்களுக்கு உண்மையைக் கூறுவான்.பிறகு ஐந்தவித்தானிடம் வந்து அவனுக்கு வேண்டிய உதவி களேச் செய்வான். இச்செய்தி மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ளது. சாதாரண மனிதன், ஐந்தவித்த பெருமையால் தேவேந்திரனும் மதித்து உதவிசெய்யும் நிலையை அடைவான் என்பதே இதன் பொருள். அஃதாவது, ஐந்தவித்தான் ஆற்றல் தேவேங் திரனையும் மதிக்கச் செய்கிறது என்பது. இக்கருத்தி னேயே,

'ஐந்தவித்தான் ஆற்றல அகல்விசும்புளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.” - என்னும் குறள் கூறுகின்றது என்னலாம். இக்கருத் துப் பெளத்த நூல்களிலும்,சமண நூல்களிலும் கூறப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/63&oldid=641935" இலிருந்து மீள்விக்கப்பட்டது