பக்கம்:புதிய தமிழகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகBானூறு-2

தமிழர் திருமணம்

இக்காலத்து திருமணம்

இக்காலத் த மி ழ ர் திருமணத்தில் புரோகிதன் இடம் பெறுகிருன்; எரி ஒம்பப்படுகிறது; மணமக்கள் தீவலம் வருகின்றனர்; அம்மி மிதிக்கப்படுகிறது; அருந் ததி காட்டப் படுகிறது; மணமகன் காசி யாத்திரை போகிருன், புரோகிதன் தமிழர் திருமணத்தில் தமி ழர்க்குப் புரியாத வேற்று மொழியில் மந்திரங்களேச் சொல்கிருன். இவை எல்லாம் அகநானூறு போன்ற பழந் தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கின்றனவா? இவை தமிழருக்குரிய திருமணச் சடங்குகளா?

செய்யுள் 86 - அகநானூறு என்னும் தொகை நூலில் இரண்டு பாக்களில் இரண்டு திருமண நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள் ளன. அவற்றுள் செய்யுள் 86 குறிக்கும் திருமணச் சடங்குகளே இங்குக் காண்போம்: -----

திருமண வீட்டு முற்றத்தில் வரிசையாகக் கால்களே கிறுத்திப் பந்தல் போடப்பட்டிருந்தது, மணவறையில் மாலைகள் தொங்க விடப்பட் டிருந்தன; விளக்கு ஏற்றப் பட்டு இருந்தது; ஒருபால் உழுத்தம் பருப்புடன் கூட் டிச் சமைத்த பொங்கலோடு மனவிருந்து நடைபெற் றுக் கொண்டிருந்தது. சந்திரனும் உரோகணியும் கூடிய விடியற் காலேயில் முதிய மங்கல மகளிர் மணப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/69&oldid=641941" இலிருந்து மீள்விக்கப்பட்டது