பக்கம்:புதிய தமிழகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புதிய தமிழகம்

தும்போன்ற வேந்தர்களுக்குக் குறையாததன்ருே புல வர் வாழ்வு தம் வறுமையைப் பிறர் எள்ளினும் பொறுத்திடும் புலவர், தம் புலமையை எள்ளும் புல்லறி வாளாரை ஒரு போதும் விடார்காண். 'தமிழைப் பழித் தவனே என் தாய் தடுத்தாலும் விடேன்' என வீறு கொண்டெழுந்து புலமையைப் பழித்த புல்லறி வாள ரைத் தம் அறிவு மதுகையால் வாதிட்டு வென்று, 'தமிழ னென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' எனக் கூறி நிமிர்ந்து செல்லும் கவியாசர் வாழ்வு புவியாசர் வாழ்விற்கு எட்டுணேயும் குறைந்தகன்று. பூமாதும் புகழ் மாதும் திருமாதும் பொருந்திய நூம் போன்ற வேந்தரை யொத்த தலைமை யுடையது புலவர்தம் பரி சில் வாழ்க்கை என்பதை நன்குணர்ந்து நடப்பாயாக,' என்று சினந்து கூறினர் கோவூர் கிழார்.

பகைவர் சினத்திற்கும் அஞ்சாத நெடுங்கிள்ளி புல வர் சினத்திற்கு அஞ்சித் தலைவணங்கினன்; தன் தவ லுணர்ந்தான்; 'அறிவுத் தெய்வமாக விளங்கும் புல வரைக் கொன்று உலகம் உள்ளளவும் நீங்காப் பழி யைத் தேடிக் கொள்ளத் துணிந்தேனே' என்று மனங்கவன்று, இருபெரும் புலவர்பாலும் மன்னிப்பு வேண்டினன்; புலவர்க்குப் பெரும் பரிசிலே நல்கி உவத் தனுப்பினன்.

’’ །ལ ଭ୍ରନ୍ଥିମ୍ପି ଭିର୍ଜିଥ୍ୟା 359-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/80&oldid=641952" இலிருந்து மீள்விக்கப்பட்டது