பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சு. சமுத்திரம் 'நீ இன்னும் வீட்டுக்குப் போகலியா? அத்தை ஆளனுப்பி அரைமணி நேரமாவுது, இன்னுமா போகல? ஒஹோ... அம்மா தியாகம் செய்ய வந்திருக்கியளோ? ஒங்களுக்கு ஒரு சிலை வச்சுட வேண்டியதுதான். மூஞ்சை யும் முகரக் கட்டையையும் பாரு. இரும்பு அடிக்கிற இடத்துல ஈய்க்கு என்ன வேலன்னேன். சீக்கிரமா வீட்டுக்குப் போ. மாட்டுக்குப் புண்ணாக்கு கலக்கணு மாம் இன்னுமா நிக்கே?' சரஸ்வதி, அவரைப் பார்த்து ஏதோ சொல்லப் போனாள். முகத்தாட்சண்யமோ, அல்லது தாத்தா காலத்தில் இருந்து கொத்தடிமையாக வேலை பார்த்த தால் ஏற்பட்ட வேர்வையே ரத்தவோட்டமாக மாறி விட்டதாலோ என்னவோ, அவளால் பேச நினைத்தும் பேச முடியவில்லை. மாரியம்மாளை ஒரு தடவையும், தன்னைத்தானே இரு தட வையும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு, வெளியேறினாள். மானேஜரின் வீட்டுக்குப் போகாமல் நேராக வகுப்புக்குப் போனாள். தங்கப்பாண்டி, மாரியம்மாளை கம்பீரமாகப் பார்த்துப் பேசினார்: "சரிம்மா, சீக்கிரமா ஊர்ப் போய்ச் சேருங்க. எனக்கும் வேல இருக்கு.' 'என் சம்பளத்த இன்னும் கொடுக்கலியே?' 'எந்தச் சம்பளம்? போன மாதச் சம்பளம்.' 'தெரியாமத்தான் கேக்கேன், சண்டை போடணு முன்னே வந்திருக்கியா?' 'எனக்குச் சணடையில அடிபட்டுத்தான் பழக்கமே தவிர, அடிச்ச்ப் பழக்கமில்ல ஸார். வேலை பார்த்ததுக்கு சம்பளம் கேக்குறேன், அவ்வளவுதான்.'