உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேள்வித் தீ105

“ஒன்னோட பெரிய தொணதொணப்பா போயிட்டு. ரெண்டு மாதச் சம்பளத்துல, ஒரு மாதம் உனக்கு, இன்னொரு மாதம் எனக்குன்னு பேசித்தான் ஒன்னை நியமிச்சது. இதுதான், ஒன்னை கூட்டிக்கிட்டு வந்தானே... ஒன் அக்கா புருஷனோ... அத்த புருஷனோ... ராமசாமி... அவன்கிட்ட பேசி, முடிவு பண்ணுன விவகாரம். போய் அவனைக் கூட்டிக்கிட்டு வா.”

“ஸார், தொண்டை கட்டும்படி பாடம் நடத்துனது நான். ராமசாமி இல்ல.”

“இப்போ என்ன செய்யணுங்கற?”

“சட்டப்படி சேர வேண்டிய சம்பளத்த தரச் சொல்றேன்.”

“சட்டப்படி ஒனக்குத் தரவேண்டியதில்ல நீ கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாச்சு."

“ஸார், நீங்க சம்பளம் தராம நான் போகமாட்டேன். போக முடியாது.”

“என்னடி நினைச்சிக்கிட்டே, பறமுண்ட. ஊருக்கு ஒழுங்கா போய்ச் சேரனுமுன்னு நினைக்கியா, இல்ல வழியிலயே யாரையாவது விட்டு தூக்கிட்டுப் போகச் சொல்லணுமா? தப்பு என் மேலத்தாண்டி. முதல் மாதமே சம்பளத்த எடுத்திருக்கணும். முள்ளங்கிபத்த மதிரி முழுசா தந்தேன் பாரு... நீ ஏன் பேசமாட்டே? ஒன் பறப்புத்திய காட்டிட்டல்லா...”

எதிர்பாராத ‘அடிப்’ பேச்சால், மாரியம்மாள் உடம்பு முழுவதும், அதிர்ந்துவிட்டாள். அக்கினிக் குழம்பானதுபோல் எரிந்தது. ‘இவன், இவ்வளவு மட்டமான மனுஷனா? இவன், நான் சம்பளம் கேட்டதுக்காக இப்படிப் பேசல. அவன் மறைமுகமாக் கேட்டத கொடுக்காததுக்காக இப்படிப் பேசுறான். இவனை என்ன செய்யலாம்? என்ன செய்தாலும் தகும். என்ன செய்ய