பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. சு. சமுத்திரம் முடியும்? இந்த ஏழப் பெண்ணால என்ன செய்ய முடியும்? அழலாம். ஆண்டவன் கிட்ட முறையிடலாம்...வேறு யார் கிட்ட முறையிடலாம்? யார் இருக்கா? கடவுளே ...அடி என்று சொன்ன இவன் ஒடம்புல ஒவ்வொரு அடியும் புழுத்துப் போகனும், பற முண்டன்னு கேட்ட இவன யாராவது கைவேறு, கால்வேறா வெட் டிப் போடணும். எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேனும். பக்கத்துல இருக்கிற சேரியில என்னோட ஜனங்களோடு என்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், இந்தக் கிராமத்துல தனியா வீடுயெடுத்து, தனிச் சா இன்னு காட்டிக்கிட்ட என் புத்திய செருப்பால அடிக்கணும்." மாரியம்மாள், விக்கித்து நின்றாள். விம்மலை அடக்க முடியாமல் அடக்கினாள். சுவரைப் பிடித்துக்கொண் டாள் இன்னொரு கையால் சுக்கு நூறாகப் போவது போல் துடித்த தலையைப் பிடித்துக் கொண்டாள். தங்கப் பாண்டியை எரித்துவிடுபவள் மாதிரி பார்த்தாள். பிறகு எரிக்கப் போகிறவள் போல பார்த்தாள் ஏதோ ஒரு வைராக்கியம் நெஞ்சில் நெருப்பாகி, இமையில் முட்டிய கண்ணிர் எரிமலைக் குழம்பாக வடிய, வெளியே வந்தாள். ‘என்ன ஆச்சு' என்று கேட்டுக் கொண்டு, அவளை எதிர்கொண்டழைப்பவள்போல வந்த சரஸ்வதியின் மார்பில் சாய்ந்தாள். கழுத்தைக் கட்டிக்கொண்டு, விம்மல்கள் வெடிப்புக்களாக, கண்ணிர் வெள்ளமாக, உள்ளத்தில் ஏற்பட்ட கதறல், உதடு வழியாக சன்னமான ஒலமாக, ஒப்பாரியாகக் கேட்டது. எல்லா ஆசிரியஆசிரியைகளும் அவளைச் சுற்றி வந்து நின்று கொண்டார் கள் சரஸ்வதி, அவள் முதுகை ஆதரவாகத் தட்டிவிட்டு, பிறகு அவள் முகத்தை நிமிர்த்தினாள். என்ன நடந்தது என்று எல்லோரும் கண்களாலேயே கேட்டார்கள் . காரைக் கட்டிடத்தில் இருந்த வேலாயுதம் படபடப்போடு வந்தான்.