பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 சு. சமுத்திரம் ஆசிரியைகளை நியமித்தால் அவர்கள் கல்யாணத்தோடு புருஷன் வீட்டுக்குப் போகும்போது, ஒரு வேகன் ஸி' வரும். அதில் மேற்கொண்டும், ஐயாயிரம் தேறும். ஒவ்வொரு ஆசிரியைக்கும் இப்படித் திருமணமாகும் போது, இவருக்கும். வரதட்சினை மாதிரி பணம் வரும். ஆண்களை நியமித்தால், அவர்கள் கல்யாணம் செய்து விட்டு, தங்கள் மனைவிகளுக்கும் உத்தியோகம் கொடுக்கச் சொல்வார்கள். இதனால் பெண்களை மட்டுமே நியமிக்கும் தங்கப்பாண்டி, தன் ஒரே பெண்ணிற்காக, அந்த ஆணை நியமித்தார். ஐயாயிரம் ரூபாய் கமிஷனை வரதட்சணையில் பததாயிரமாகக் கழித்துககொள்ளலாம் என்று அவர் கழித்துக்கொண்டிருந்தபோது, சண்முகம் இப்படிச் செய்திருக்கிறான். இருந்தாலும் அவன்மீது வெறுப்பு ஏற்படவில்லை. ஒரு மாமனாருக்குரிய பொறுமையைக் கடைபிடித்தார். மகளைக் கட்டியவுடன், அவன் சரியாகிவிடுவான் என்பது அவர் எண்ணம். இப்படிப் பலர் ஆகியிருப்பதை அவர் பார்த்திருக்கிறார். 'ஆனால் இந்த சரஸ்வதி இரு... இரு... ஒப்பனமாதிரி ஒன்னையும் மரம் வெட்டப் போக வைக்கேன்." இந்திரா, இன்னும் தன் அறைக்கு வராதது அவருக்கு ஏமாறறமாக இருந்தது. ஒரு வாரமாச்சுது, ஏன் வரல? டெப்டி இன்ஸ்பெக்டர் வாரதுனால வகுப்புல இருப்பாள். இப்போ இருக்கட்டும். சுழல் நாற்காலியைப் போல், சிந்தனையையும் சுற்ற விட்ட தங்கப்பாண்டி, திடீரென்று எழுந்து வெளியே ஒடினார். டெப் டி-இன்ஸ்பெக்டர் வந்துகொண்டிருந் தார். அவரை எதிர்கொண்டழைத்து, சுழல் நாற்காலியில் உட்கார வைத்தார். காபியையோ, கலரையோ அல்லது இரண்டையுமோ குடித்துவிட்டு, இருவரும் ஒவ்வொரு வகுப்பாகப் பார்வையிட்டார்கள். தொட்டால் சுருங்கி"