பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 123 விழாக்களில் கலந்துகொள்ளப் போனதாக வேறொரு பேச்சு. இரண்டு பையன்களுக்கு வேலைக்கு சிபாரிசு செய்வதற்காக ஊரான் பணத்தில் போனதாகப் பேச்சு. இதில் ஏதாவது ஒன்றிற்காகவோ அல்லது எல்லாவற்றிற்கு மாகவோ, அவர் போயிருக்கலாம். ஆசாமி, நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதில், லேசாகக் குழம்பியிருந்தாலும், கலங்கியவர் மாதிரி தெரிய வில்லை சம்பளம் கிடைக்காததால், ஆசிரியர்கள் வயிற்று வலியில் ஏதோ பேசியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, தலைக்கு ஐம்பது ரூபாய் கமிஷனை எடுத்துக் கொண்டு, மீதிப் பணத்தை, தையல் ஆசிரியப் பையன் மூலமாக அந்தந்த ஆசிரியர்கள் வீட்டிலேயே பட்டுவாடா செய்துவிட்டார். சண்முகத்திற்கு மட்டும் சம்பளம் இல்லை. ஆன்டுடியில் பயிற்சிக்குப் போனவன்; இனி மேல்தான் பேபில் எழுத வேண்டும். சம்பளம் கொடுத்து விட்டதால் ஆசிரியர்கள் சரிபாயிருப்பார்கள் என்று அவர் நினைத்தபோது, சண்முகம் சொன்னபடி சங்கத்தில் சேர்ந்ததால்தான் தங்கபபாண்டி சரியாகி இருக்கான் என்று ஆசிரியர்கள் நினைத்துக்கொண்டார்கள். என்றாலும், எவரை மன்னித்தாலும், சரஸ்வதியை மன்னிக்க அவர் தயாராக இல்லை. அவளுக்கு, குறி போட்டு விட்டவர்போல், கண்களை மூடிக்கொண்டு, தலைகளை ஆட்டிக்கொண்டார். எல்லாவற்றிற்கும் காரணமான சண்முகம்மீது அவருக்கு வருத்தம் ஏற்பட் டதே தவிர, இன்னும் கோபம் வரவில்லை. உள்ளுரில் ஒரளவு வசதியான பையனான அவனுக்கு, எஸ் எஸ்.எல். சியில் தள்ளோ தள்ளென்று தள்ளியும், தேற முடியாமல் போன தன் ஒரே மகள் அகிலாவை, கட்டி வைத்துவிட வேண்டும் என்பது அவர் திட்டம், அதனால்தான், போன வருஷம் அவனை பள்ளியில் நியமித்தபோது, வழக்கமாக வாங்கும் ஐயாயிரத்தை அவர் வாங்கவில்லை. பெண்