பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சு, சமுத்திரம் எழுதப்பட்டிருந்தன. கடைசி வாக்கியத்தை தன் வகுப்புச் சுவரில் எழுதிய தங்கப்பாண்டியின் ஆசிரிய-மச்சான் கோவிந்தன், காகிதப் பூக்களை ஒரு சில பகுதிகளில் குறுக்கும் நெடுக்குமாகக் கட்டியிருந்தார். பல வகுப்புகளில் பல புது முகங்கள் வேதப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந் கிருக்கிறார்கள் இல்லாத மாடக்கண்ணுக்கு, ஜோஸ்ப். ஒடிப்போன உதிரமாடனுக்கு, டேவிட்; பூமாரிக்கு, ரோஸ்மேரி. இப்படிப் பல பெயர் மாறாட்டங்கள்.' டெ ப்டி இன்ஸ்பெக்டர் வேதப் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, இங்கே உள்ள மாடக்கண்ணு வகை யறாக்கள், அங்கே விரட்டப்பட்டு 'தாஸாகவும் ஜெய சீலியாகவும் மாறுவார்கள். இல்லாத செக்ஷன்களை உருவாக்குவதில், இரண்டு பள்ளிகளும் கூட்டணி வைத் துக்கொண்டன. இதில் இளம் பிள்ளைகள் திருட்டணி யாக பயன்படுத்தப்படுவது வழக்கம். சென்னையில் சாராயத்திற்கு சின்னப் பையன்கள் பயன்படுத்தப்படுவது போல! ஒருவார காலமாக சென்னை, மதுரை என்று எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, தங்கப்பாண்டியும் அன்று தான் ஊருக்குத் திரும்பி வந்தார். மனிதர் எப்போதுமே ஒரே கட்சி... அதாவது ஆளுங்கட்சி. ஜனாதிபதி ஆட்சி நடந்ததால், எப்படி ஆடையணிவது என்று தெரியாமல் குழம்பி, இறுதியில், கதர்வேட்டி, கதர்ச் சட்டையை அணிந்துகொண்டு தோளில் கறுப்பு-சிவப்புத் துண்டை யும் போட்டு டுர் கிளம்பியவர். வீட்டுக்கு வந்து மனைவி மூலமும், மச்சான் மூலமும் நடந்த விஷயங்களைக் கேட்டு விட்டு, நேராக பள்ளிக்கூடத்திற்கு வந்துவிட்டார். பலர் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எம்.பி.பி.எஸ் சீட்டுக்கு இப்பவே ஆள் பிடிக்கப் போனதாக ஒரு பேச்சு. பள்ளிக்கூடத்தில் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதாகவும், அதைத் தீர்ப்பதற்காக கந்தசாமிக் கிழவருடன், அவருடைய கொழுந்தியா மகனைப் பார்க்கப் போன தாகவும் இன்னொரு பேச்சு. எ திரும் புதிருமாக உள்ள இரண்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்- 'அறிமுக