உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கேள்வித் தீ⁠121

சிந்தனையிலிருந்து மீண்ட சண்முகம், இந்திராவிடம் அவளை மீட்டவன்போல், ‘பாரத்தை’ நீட்டினான். இந்திரா, அதை வாங்கிக்கொண்டு, வேகவேகமாக நடந்து மானேஜர் அறைக்கு முன்னால் ஏதேச்சையாக நின்றுகொண்டு, கண்களைத் துடைத்துக்கொண்டே ‘பாரம்’ தீர்ந்தவள்போல், அந்தப் பாரத்தைப் பார்த்தாள்.

6


க
ணவனுக்குத் தெரிந்தும், அவனுடைய அனுமதியோடும் சோரம் போகிறவள். நான்குபேர் முன்னிலையில், கணவனிடம் மிகப் பௌவியமாக நடந்துகொள்வாள் என்பார்கள். இதுபோல் சகல சங்கதிகளையும் தெரிந்து வைத்திருக்கும் பள்ளிக்கூட டெப்டி இன்ஸ்பெக்டரின் வருகைக்காக, ஒவ்வொரு வகுப்பும் கிட்டத்தட்ட விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்தத் தடவை, ஆசிரியர்கள் யாரும் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. என்றாலும், ஒரு நிறுவனத்தைக் காட்டிக் கொடுக்கக்கூடாது என்று நினைத்தோ என்னவோ, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் தத்தம் வகுப்புகளில், கரும்பலகையை சுத்தமாகத் துடைத்துவிட்டு, மாணவரின் எண்ணிக்கை, வருகை, வகுப்பு, செக்க்ஷன் ஆகிய விவரங்களை, கலர் சாக்பீஸ்களால் எழுதிவைத்திருந்தார்கள். பிள்ளைகள்கூட, அன்று தலையில் எண்ணெய் வைத்து, அழுக்கு அதிகமாக இல்லாத ஆடைகளோடு இருந்தார்கள். சுண்ணாம்பை, ஐந்தாண்டு காலமாகப் பார்த்தறியாத அழுக்கடைந்த சுவர்களில் ‘சுத்தம் சோறு போடும்’ ‘கல்வி கண்ணாகும்’ ‘ஆசானே நடமாடும் தெய்வம்’ என்பன போன்ற வாக்கியங்கள் எப்படியோ கண்ணில் படும்படி