பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சு. சமுத்திரம் வாய்க்கரிசி இல்லாத முண்டன்னா, அது தன் மகளைத் தான் என்பதை எளிதாகப் புரிந்துகொண்ட சரஸ்வதியின் அம்மாக்காரி 'இனிமேல், வாய்க்கு அரிசி இல்லாமல் செத்தாலும் சாவோமே தவிர, ஒன் ஊத்த வாய இனி மேலும் பேசவிட மாட்டோம். என்னதான் நினைச்சு கிட்ட?' என்று கத்த, இப்போது எல்லோரும் கத்தினார் கள். அந்தப் பக்கமாக வந்த சில ஆண்கள் தத்தம் மனைவி களை அடக்காமல், ரசித்துக் கொண்டிருந்தார்கள். நேற்று தன் வகுப்புப் பிள்ளைகளிடமும் எட்டாவது வகுப்புப் பிள்ளைகளிடமும் 'ஒங்களுக்குக் கொடுக்க வேண்டிய கோதுமை ரவை, தென்காசில விற்பனை யாவுது. சட்டப்படி தினமும் ஒங்களுக்குச் சாப்பாடு போடணும். எவனாவது எவளாவது ஒங்க வீட்ல இதச் சொல்லியிருக்கீங்களா?...மகாத்மா காந்தி இந்தமாதிரி அநியாயத்தை பொறுத்துக்கிட்டு இருந்திருப்பாரா? பகத்சிங் இப்படிப் பார்த்துகிட்டு இருந்திருப்பானா?" என்று சன முகம் சொல்லியிருந்தான். அதை தந்திரமாக அவன் சொல்லவில்லை. தானாக வந்தது. ஒரு வேளை எஸ்.ஐ.இ.டி கல்லூரி நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகளில் படித்ததன் தாக்கமாக இருக்கும். அவன் அப்படிச் சொன்னதை வீட்டுக் கணக்காக எடுத்துக்கொண்ட பிள்ளைகளில் ஒரு சிலர் தங்களை காந்தியாகவும், பலர் பகத்சிங்காகவும் நினைத்துக்கொண்டு, தத்தம் வீடுகளில் நடந்ததைச் .ெ ச ல் லி, நடப்பதற்கு அஸ்திவாரம போட்டார்கள். அன்று-திங்கட்கிழமை வந்தது. ஒலித்த பள்ளிக்கூட மணி, தங்கப்பாண்டிக்கும், ஆசிரியர்களுக்கும் வேறு வேறு மாதிரியாகக் கேட்டது. ரயில் தண்டவாளம் மாதிரி, ஒரடி நீளத்தில் விட்டத்தில் கட்டிய கயிற்றில் தொங்கிக் கொண் டிருந்த இரும்புத்துண்டை, சிலேட்டுக் குச்சி மாதிரி இருந்த ஒரு இரும்பால் எக்கி எக்கித் தாக்கி மணியடித்துக்