பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 133 கொண்டிருந்த ஒரு பயல்கூட, நெடு நேரமாக அடித்தான். கல்யாணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு தன் வீடே வித்தியாசமாகத் தெரிவதுபோல, ஆண்டுக்கணக்காக பழக்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம் எல்லோருககும் வித் தியாசமாகத் தெரிந்ததால், ஒருவரை ஒருவர் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டார்கள். தங்கப் பாண்டி, வகுப்புகளுக்குப் போகும் ஆசிரியர்களைப் புதிதாகப் பார்ப்பதுபோல பார்த்தார். எப்போதும், கலக்குபவர் போல் காணப்படும் அவர், அன்று கலங்கியவர்போல் காணப்பட்டார். ஆரம்பத்தில், சண்முகம், டெப்டி இன்ஸ்பெக்டரிடம் நடந்துகொண்ட விதத்தை அவர் சாதகமாகவே எடுத்துக் கொண்டார். அவன்மீது ஆக்ஷன் எடுத்தபிறகு, அந்த ஆக்ஷனுக்கு டெப்டி-இன்ஸ்பெக்டர் மூலம், மாவட்ட கல்வி அதிகாரி யின் 'கன்கரன்ஸ்' கிடைத்துவிடும் என்றுதான் நினைத் தார். ஆனால் டெப்டி வேறுவிதமாக ரியாக்ஷ னைக் காட்டிவிட்டார். எனக்கு. குழி வெட்டுறாங்க ஸார்' என்று, பஸ் நிலையத்தில் தங்கப்பாண்டி சொன்னபோது, 'ஒங்களுக்கு வெட்டுற குழில நான் விழ முடியுமா?’’ என்று டெப்டி சொல்லிவிட்டார். "சரி, இந்த டெப்டி இல்லாட்டா...அவன் அப்பன்..." என்றுதான் தங்கப்பாண்டி நினைத்தார். அதற்காகத்தான் மாவட்ட தலைநகருக்குப் போயிருந்தார். ஆனால் அங்கே கிடைத்த தகவல் அவரைக் கலக்கிவிட்டது. மாரியம்மாள், தங்கப்பாண்டி தன்னை ஜாதியைச் சொல்லித் திட்டிய துடன், சம்பளத்தையும் மோசடி செய்ததாக எழுதிய மனுவின் நகலை, ஆசிரியர் சங்கம், கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறதாம். கவர்னரின் உத்தரவுப்படி மாவட்ட கல்வி அதிகாரி, நேரடி விசாரணைக்கு வரப்போகிறா ராம். சொந்தத் தம்பியான ராஜலிங்கமே, சொந்தமில்லா தவன்போல நடந்து கொள்கிறானாம். ஒருநாள்