பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 சு. சமுத்திரம் கூட நான் வகுப்புக்குப் போகச் சொல்லணும். ஏதோ என் தலவிதி. அப்போ தாலுகா ஆபீஸ்ல கிளார்க்கா சேர்ந் திருந்தால், இந்நேரம் டெப்டி கலெக்டரா ஆகியிருப்பேன். கொள்ளைக்காரன்கிட்ட மாட்டிக்கிட்டேன். எல்லாம் தலவிதி.' தங்கப்பாண்டி, வெளியே வாசல் காப்போனாய் நின்ற தையல்-ஆசிரியன் பெருமாளை, இந்திராவை கூட்டிக் கொண்டுவர கூரைக் கட்டிடத்திற்கு அனுப் பினார். அரை மணி நேரம் கழித்து இந்திரா வந்தாள். எதிரே கிடக்கும் நாற்காலியிலும், சிலசமயம், அவர் உட்கார்ந்திருக்கும் சுழல் நாற்காலிச் சட்டத்திலும், அவர் சொல்லாமலே உட்காரும் இந்திரா, அவர் முன்னால் வந்து 'எதுக்கு ஸார் கூப்பிட்டீங்க?' என்றாள். தங்கப்பாண்டி அசந்துவிட்டார். பிறகு, தன்னை சமாதானப் படுத்திக்கொண்டே 'நீ ஏன்...கவலப்படுற? இத்தப் பயலுவ எம மாத்திரம்?' என்று சொன்னபோது, இந்திரா நீங்க மட்டும் எம்மாத்திரம்?' என்பது மாதிரி அவரைப் பார்த்தாள். அதை ஏக்கப் பார்வையாக நினைத் துக்கொண்டு, தங்கப்பாண்டி. அவள் தோளைத் தொடுவ தற்காக எழுந்தபோது, இந்திரா வாசல் பக்கமாகப் போய் நின்றுகொண்டாள். பிறகு அமைதியாகப் பேசினாள் 'ஸார் இனிமேல் நான் மானத்தோட வாழனுமுன்னு நினைக்கேன். ஒருத்தருக்கு ஒரு தடவ மானம் போயிட்டாலும், அப்புறம் அவருக்கு மானமே இல்லன்னு ஆயிடாதுன்னு சண்முகம் தம்பி. தெய்வம் மாதிரி தெரிய லச்சிட்டான். பழகுன தோஷத்துல நீங்சளும் திருந்தணுமுன்னு ஆசப்படுறேன். சரி...நான் வாரேன் ஸ்ார்...' இந்திரா போய்விட்டாள். தங்கப்பாண்டி, முண்டமாக விரும்பாதவர்போல், தலையைப் பிடித்துக் கொண்டார். வகுப்புக்களில் கூட்டு எண்களின் பெருக்குத் தொகை,