பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தி 139 'திருந்துறதுன்னா... நான் என்ன திருடனா? 'ஆசிரியர்கள் சம்பளத்துல கமிஷன் பிடிக்க றதும், அப்பாய்மெண்டுக்கு ஐயாயிரம் ரூபாய் வாங்குறதும், சேமிப்பு நிதிப் பணத்தை இரண்டு வருஷமா போஸ்ட் ஆபீஸ்ல போடாமல் இருக்கதும், மாணவர்கள் வயித்துல அடிக்கிறதும் திருடன் செய்யுற காரியமில்ல...திருடன் மனுஷன் , ' தங்கப்பாண்டி விறைப்பாக உட்கார்ந்தார். சரி... ஒங்க எஸ் எஸ்.எல்.சி. சர்டிபிக்கேட்டை எடுத்துட்டு வாரீங்களா... நான் இன்னைக்கே இதை அனுப்பணும்.' 'யார்... யாரை அனுப்பப் போறாங்க என்கிறது. முடிவாகிற காலம் நெருங்கிக்கிட்டு இருக்கு.' தங்கப்பாண்டி எழுத்து நின்று ஆவேசமாகப் பேசினார். இந்தா பாரு... சண்முகம்... என் சர்வீஸும், ஒன் வயசும் ஒண்ணு. ஒன்னை மாதிரி எத்தனை பேர பாத்திருப்பேன். நீ எம்மாத்திரம்? பதினைஞ்சி வருஷத் துக்கு முன்னால, ஒன்னை மாதிரி ஒருவன் சட்டம் பேசி ஊர் ல ஆள் திரட்டினான். ஊாக்காரங்களும் அவன் பேச்சைக் கேட்டு போட்டிப் பள்ளிக்கூடம் ஆரம்பிச் சாங்க. நான் போலீஸை ஊருக்குக் கொண்டு வந்தேன். இருபது இருபத்தைஞ்சு பேர போலீஸ் மூலம் பைண்ட் ஒவர்ல" போட்டேன். வாராவாரம் போலீஸ் ஸ்டேஷன்ல போய் ரிப்போர்ட் பண்ணுறதுக்காக நடந்த நடையில, ஒவ்வொருவனும் கடைசியில் என் காலுல வந்து விழுந்தான். நீங்க என்ன செய்தாலும் சரின்னு காலுல விமுத்தாங்க. இது நீ சின்னப் பிள்ளையாய் இருக்கும் போது நடந்த சங்கதி. கேள்விப்பட்டிருப்பே இன் னொண்ணு தெரியுமா? எவன்... ஊர் ஜனங்கள தூண்டி விட்டானோ அவனே அப்புறம் ப ஞ் சா ய த் து த் தலைவராகி, இப்போ மச்சான்... யூனியன் எலெக்ஷன்ல நிக்கப் போறேன். ஒங்க ஆதரவு வேணுமுன்னு’ என் வீட்டுக்கு நடையாய் நடக்கான்.'