பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 சு. சமுத்திரம் சண்முகம் நிதானமாகப் பதிலளித்தான். "தனி மனிதன் நடையைவிட சரித்திரத்தோட நடை தனிநடை ஸ்ார். அது எவரையும் சாராமல் தனக்குத்தானே நடை போடும். அப்படி நடைபோடுவதற்கான பாகையை அமைக்க, அந்த சரித்திரமே தக்க சமயத்தில் தக்க ஆட்கள தேர்ந்தெடுக்கும்; இதை மறந்துடாதீங்க." 'சரி சண்முகம் ஸார்! ஒங்க சரித்திரத்த இந்த சின்னப் பள்ளிக்கூடம் தாங்காது. சர்டிபிக்கட்ட கொண்டு வாlங்களா... ஏதோ இந்த சின்ன இடத்தில சரித்திரம் துவங்குறதாய் நினைப்பு இல்லாம சீக்கிரமாய் கொண்டு வாங்க. சரித்திரம், பொல்லாத சரித்திரம்.' 'ஒங்கள மாதுரி ஆசாமிக்கு சரித்திரம் பொல்லாதது தான் ஸார் . வீட்ல துவங்குற சரித்திரம் உலகத்துல படர்வதும், உலகத்துல துவங்குகிற சரித்திரம் வீட்டில முடியறதும் இயற்கை. இதுக்கு நீங்களோ, நானோ தப்ப முடியாது...' 'யாரு தப்ப முடியாதுங்கறது பாத்துடலாம். சரி... சர்டிபிக்கேட் கொண்டு வரப் போlங்களா இல்லையா?" 'அந்த புகார் மனுவை என்கிட்ட கொடுங்க. சும்மா கொடுங்க. நான் பேப்பர கிழிக்கிற ஆளுல்ல. அதுலயே என் பதிலையும் எழுதிடுவேன்.' தங்கப்பாண்டி, சந்தேகத்துடன்தான் புகார் மனுவை அவனிடம் நீட்டினார். அவன், அதை கிழிக்கப்போனால் தடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கைகளையும் படகோட்டி மாதிரி வைத்துக்கொண்டார். சண்முகம் அவருக்கு எதிரே கால்மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு, மடமடவென்று எழுதினான். என்ன எழுத வேண்டும் என்று ஏற்கெனவே மனதில் வரித்திருந்ததால், வரிக்குவரி யோசிக்காமலே எழுதினான். எழுதிவிட்டு