பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 9 அந்த நோயாளி தன்னைத் திட்டவில்லை என்பதில் ஆறுதல் பட்டவர்போல் சாமியார், லேசாகப் புன்னகைத் தார். பிறகு, ஈஸ்வரனைத் திட்டினாலும பரவாயில்லை, தன்னைத் திட்டலாகாது என்ற எண்ணம் ஏற்பட்டதற் காக, அந்த எண்ணத்தைத் தோற்றுவித்த நெஞ்சை, கையால் குத்திக்கொண்டே ஆதங்கத்தோடு சுேட்டார். ‘'நீ என் நிஸ்டையைக் கலைக்கல. ஏன்னா நான் இன்னும் நிஷடை நிலைக்குப் போகிற அளவுக்கு ஈஸ்வர கிருபை கிடைக்காதவன்... ஆனாலும் ஈஸ்வரனை சொல்லக்கூடாத வார்த்தையால...' சாமியார், நோயாளி சொன்ன வார்த்தையைச் சொல்ல முடியாமல் அவஸ்தைப் பட்டபோது, அந்த நோயாளி சகஜமாகப் பதிலளித்தார். "ஈஸ்வரன் அப்படிச் சொன்னா பாவமில்ல சாமீ... அவன் அனந்தன்... அப்பனும் அம்மாவும் இல்லாதவன்... இருந்தாலும்... இனிமேல் அப்படிச் சொல்லமாட்டேன் சாt...' சாமியார் நிமிர்ந்து பார்த்தபோது அந்த நோயாளி வேகவேகமாய் நடந்து மறைந்துவிட்டார் கூனிக் குறுகிச் செல்லும் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாமியார் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு, அருணகிரி நாதரின் பாடலைக் கேட்கப் போனார். அந்தப் பாடலோ இப்போதும் ஒலித்தாலும், முன்போல தெளிவாக ஒலிக்க வில்லை. வார்த்தைக்கு வார்த்தை இடையே, அந்த தொழு நோயாளியும் வந்தார்-அதுவும் ஈஸ்வரனை நித்திக்ரும் பேச்சோடு. திடுக்கிட்ட சாமியார், கண் திறந்து மூச்சை நிறுத்தி நிறுத்தி விட்டார். அவன் கர்ம வினையை... அவன் அனுபவிக்கான்...ஈஸ்வரன் என்ன செய்வான்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு.