பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 சு. சமுத்திரம் பதினாறு ஆசிரியர்களில் ஆசிரிய-மச்சான் கோவிந் தனைத் தவிர, தலைமை ஆசிரியர் உட்பட எல்லோரும், மானேஜர் அறையைப் பார்த்துப் போகப் போனார்கள். கோவிந்தன் ஏதோ பேசப் போனார். வேலாயுதம் அவர் சட்டையைப் பிடித்து உலுக்கியதில், அப்படியே உட்கார்ந்துவிட்டார். அப்போது, சரஸ்வதியின் அப்பா பொன்னையாவும், அவள் அம்மாவும், மானேஜர் அறைக்குள் நுழைந்தார்கள். அவர்கள் பேசி முடியட்டும் அல்லது முடிக்கட்டும் என்பதுபோல, ஆசிரியர்கள் புறப் பட்ட இடத்திலேயே நின்றார்கள். பொன்னையாவும் அவர் மனைவியும் மாறி மாறி மன்றாடுவது, ஆசிரியர் களுக்கு நன்றாகக் கேட்டது. 'தங்கப்பாண்டி, ஒன் தாத்தா காலத்துல இருந்தே ஒங்க வீட்ல நாயா உழைச்சவன் நான். ஒன்னை இடுப்புல எடுத்தவன். சின்னப் பய மவள் , சின்னத்தனமா நடந்து கிட்டா, நீயே அவள கன்னத்துல ரெண்டு போட்டிருக் கலாம். ஆனால் இப்படிப் பண்ணலாமா ராஜா? நம்பி எழுதிக் கொடுத்த காகிதத்துல, நம்பிக்கை மோசடி பண்ணலாமா? அப்படி பண்ணுறதாய் இருந்தால், நான் எத்தன தடவ பண்ணியிருக்கலாம்? ஒரு தடவ ஒன் வீட்டு பீரோவுல கத்தை கத்தையா ரூபா நோட்டு மின்னிச்சுது. ராத்திரி வேள. ராசம்மா பீரோவ பூட்ட மறந்துட்டுப் போயிட்டா. நான், அவ வாரது வரைக்கும் நாய் மாதுரி காவலுக்கு இருந்தவன். ஒனக்கு பள்ளிக்கூடத்துக்கு எத்தன தடவ சோறு சுமந்துகிட்டு வந்திருப்பேன். என் சோற்றுல மண்ண அள்ளிப் போடலாமா மவராசா? தங்கப்பாண்டி அலட்சியமாகப் பேசினார். 'நீங்களும் கூட்டுக் கள்ளங்க யாரக் கேட்டு மாரியம்மாளை கொண்டுவிடப் போனியரு? என் வீட்டுக்கு தண்ணி எடுக்க வர முடியாத அளவுக்கு ஒம்ம மகள் பெரியவளா ஆயிட்டா என்ன? என் பெண்டாட்டிய எதிர்த்துப் பேசுற அளவுக்கு, நீங்க தயாராகிக்கிட்டீங்க. நான் சொல்லுற