பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 145 ஏட்டளவில் தையல் ஆசிரியனாக வேலை பார்க்கும் பையன், இன்னொரு கடிதத்தைக் கொண்டு வந்து, சண்முகத்திடம் கொடுத்தான். சண்முகம், அவன் கொண்டு வந்த ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு கடிதததை வாங்கிவிட்டு, கடித உறையில் இருந்து கடிதத்தைப் பி ரி த் து எல்லோருக்கும் கேட்கும்படி படித்த ன்: 'நீங்கள், தக்க காரணத்திற்காகக் கேட்கப்பட்ட எஸ் எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டை காட்ட மறுத்ததுடன், மேலதிகாரியையும் நிர்வாகியையும், சம்பந்தமில்லாமல், சம்பந்தப்படுத்தியிருப்பதால், உங்கள் சர்டிபிக்கட்டில் வில்லங்கம் இருப்பதால் தான் நீங்கள் அதைக் காட்டாமல் மழுபபுகிறீர்கள் என்று அனுமானிக்கப் படுகிறது. ஆகையால் முழு விசாரணை முடியும் வரை, உங்களைத் தாற்காலிக பதவி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறது. விசாரணை முடிவது வரைக்கும், இந்த ஊரிலேயே இருக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறது ' எல்லோரும், அவனால் காக்கப்படுபவர்கள் போல வும், அவனைக் காக்கப் போகிறவர்கள் போலவும் பார்த் தார்கள் சண்முகம் சிரித்துக் கொண்டான். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டிக் கொண்டான். ' இனிமேல் நாம் பொறுத்தால், நமக்கு இந்த பிள்ளங்களுக்கு மகாத்மா காந்தியைப் பற்றியோ, பகத்சிங்கைப் பற்றியோ சொலலிக் கொடுக்க அருகதை கிடையாது' என்றான். 'வாங்க, அவன் கையக் கால ஒடிக்கலாம். நானே ஒடிக்கேன்' என்றான் வேலாயுதம். 'வாங்க பாத்துப்புடலாம்' என்றார் சீனிவாசன். நானும் வாரேன் என்றார் தலைமை ஆசிரியர். ւ!.--10