பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சு. சமுத்திரம் மாட்டேன். ஒரு வீட்ல அந்யோன்யமாய் பழகிட்டு அந்த வீட்ல நடக்கிற விஷயங்கள வெளில சொல்லுத அயோக்யத்தனத்த எப்பவும் செய்யாதவன். என் மவளப் பாத்தா தேவடியா முண்டங்கற? இதவிட நீ... ஒன் அம்மாவச் சொல்லியிருக்கலாம்...’’ என்று இரைந்த போது, ஆசிரிய-ஆசிரியைகளும், அத்தனை பிள்ளைகளும் அங்கே வந்துவிட்டார்கள். சரஸ்வதி, அப்பாவைப் போய்ப் பிடித்துக்கொண்டாள். சண்முகம், சத்தம் போட்டுச் சொன்னது அந்த அமளி யில் லேசாகத்தான் கேட்டது. 'பொன்னையா மாமா, நீங்களும், அத்தையும் மொதல்ல வெளியே போங்க உம் போங்க...' பொன்னையாவும், அவர் மனைவியும் வெளியே போய், மைதானத்தில் நின்றுகொண்டார்கள். சண்முகம் தங்கப்பாண்டியைப் பார்த்து கர்ஜித்தான். 'தங்கப் பாண்டி லார், ஒங்க காலம் முடிஞ்சு எங்க காலம் துவங் கிட்டுது. எங்களோட சர்டிபிக்கட்டுங்களையும் கொடுத் துட்டு, எங்களுக்கு கொடுத்த லட்டரையும் வாபஸ் வாங்கிட்டு, இதர ஊழல் சமாசாரத்துக்கும் நீங்க பிராய சித்தம் செய்யும் முன்னால், ஒங்கள...சீ...ஒனக்கெதுக்கு மரியாதை? ஒன்னை...இந்த அறையை விட்டு வெளில விடப்போறதுல்ல அப்படிப் போவதாய் இருந்தால், எங்கள பிணமாக்கிட்டுத்தான் நீ போக முடியும்...' எல்லா ஆசிரியர்களும், மானேஜர் அறையின் வாசலை மறைத்துக் கொண்டார்கள். நிலைப்படியில் நினறு கொண்டு, குறுக்கும் நெடுக்குமாக வேயப்பட்ட வேலிக் கம்புகள் மாதிரி நின்றார்கள். அந்த மனித வேலி வாசல் முழுவதையும் அடைத்தது. ஒவ்வொருவர் அடிவயிற்றிலும் பற்றிக் கொண்டிருந்த நெருப்பு. நெஞ்சிலே தணலாகி, கண்ணிலே ஒளியாகி, "ஒன்னை விடமாட்டோம்விடமாட்டோம்” என்ற ஒலியாகி, தங்கப்பாண்டியைச்