பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 149 கட்டது. அவர் கண்களை மூடவைத்தது. காதுகளை நேராக வைத்தது. என்ன நடந்தது என்பதை முழுவதும் யூகிக்க முடியவில்லையானாலும், ஆசிரியர்கள் இப்படி நடக்கவேண்டுமானால், மானேஜர் எப்படியோ நடந் திருப்பார் என்பதை உணர்ந்ததுபோல, பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட மாணவ-மாணவியர், வேலியில் படர்ந்த செடி கொடிகள் மாதிரி ஆசிரியர்களை நெருங்கி நின்று கொண்டார்கள். சிலர், தேர்தல் காலத்தில் பாதிப்புக்கு உட்பட்டவர்களாய், 'மானேஜர் ஒழிக... ஆசிரியர்கள் வாழ்க...' என்றுகூட தம்பமுடியாதபடி முழக்க மிட்டார்கள். இன்னும் சில பிள்ளைகள், தத்தம் வீடுகளுக்கு ஒடினார்கள்-பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லி மானேஜரை கொல்லும்படி சொல்ல வேண்டும் என்று நினைத்தவர்களாய், சிலர் தங்கப்பாண்டியை ஆஷ் துரையாகவும், சண்முகத்தை வாஞ்சிநாதனாகவும் கற்பனை செய்தனர். 'ஏன்...ஸ்ார்...சட் டுன்னு சுட மாட்டங்கார்...' எவ்வளவு பெரியவனையும் முதலில் ஒரு போடு' போட்டுவிட்டால், அவன் அவுட்டு' என்பதற்கு.விளக்கம் போல் ஏற்கெனவே பொன்னையா கொடுத்த அடியில், அதிர்ந்துபோன தங்கப்பாண்டி , சுழல்நாற்காலியில் அப் படியே உட்கார்ந்திருந்தார். அந்த நாற்காலி இப்போது ஆட வில்லை, அசையவில்லை. தனித்தனியாகக் கிடக்கும் ஆசிரியக் குச்சிகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒடித்து விடலாம் என்று நினைத்தவர், இப்போது அந்தக் குச்சி கள், ஒன்றோடு ஒன்றாகி, தோழமைப் பத்தமென்ற கயிற் றால் ஒடிக்க முடியாத விறகுக்கட்டாக மாறிவிட்டதைப் புரிந்துகொண்டவர் போல் பார்த்தார். தானே தனியொரு குச்சியாகப் போனவர்போல் தவித்தார். உயிரோடயே சமாதியானது போல், அந்த அறையை அங்குமிங்குமாகப் பார்த்தார். ஒருவேளை நமக்குள் பைத்தியம் பிடித்திருக் குமோ? அ த ண | ல தா ன் கண்ணுக்கு இப்படித்