பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சு. சமுத்திரம் தாள். இரண்டாவதாக அழுதாள். மூன்றாவதாக முனங்கினாள். இறுதியில் இதுதான் வாழ்க்கை என்று புரிந்துகொண்டு அதை ஏற்றுக்கொண்டாள். ஒரு சின்ன வீட்டில் இருந்த கூட்ட நெரிசலிலும் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அந்தப் பையன் எஸ்.எஸ் எல்.சி. படித்தபோது, அவன் சித்தப்பாக்கள் தங்களை முன்பு மதிக்காத உறவுக்காரர்களிடமே பெண் வாங்கி மதிப் படைந்தார்கள். அண்ணன், மகனைப் படிக்க வைக்க, தங்களிடம் பணம் கேட்டாலும் கேட்கலாம் என்பதைப் புரிந்துகொண்ட 'டிப்ளமா தம்பி நம்ம...ராஜை காலேஜுக்கு... அனுப்பாண்டாம் அண்ணா. பாவம்... எங்கள படிக்க வைக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டிங்க... இன்னும் கஷ்டப்படுறதுல நியாயமில்ல... அதனால... அவனை... ஏதாவது வேலையில சேர்த்துடுங்க...' என்ற போது, ராமையா பொறுத்துக் கொண்டார். ஆனால் குற்றேவல்காரியாகப் பணியாற்றிய, அவர் மனைவி ஒங்க வீட்டுக்கு பிச்சைக்கு வரமாட்டோம்பா. ஒங்க கண் முன்னாலேயே என் மகனைப் படிக்க வச்சுக் காட்டுறேன் பாரு... மொதல்ல வீட்டைவிட்டு வெளியேறு' என்றாள். ராமையா எதுவும் பேசவில்லை. அண்ணன் தட்டிக் கேட்காத கொடுமையில், தம்பி வெளியேறினான். இன்னொரு தம்பியும் செள்கரியத்தை முன்னிட்டு அவனுடன் கூ ட் ட னி அமைத்துக் கொண்டான். இதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒன்னையாடா இந்தப் பய இப்படிக் கேட்டான்' என்று கேட்கவேண்டிய ராமையாவின் அம்மாவே, தன் மூத்த மகனிடம் வந்து "ஒன் பெண்டாட்டிய பேசவச்சு... என் மகனை விரட்டிட்டே. இப்போவாவது ஒன் மனசு குளிர்ந்து தா?” என்று கேட்டுவிட்டுப் போய்விட்டாள் இளைய மகன் ஒருவன் வீட்க்ெகு. பாவம்... சின்ன மருமகள் கைக் குழந்தைக்காரி...ஒத்தாசை செய்ய ஒடிவிட்டாள்.