பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 15 ராமையாவுக்கு அம்மா சொன்னதுபோல் உள்ளம் குளிரவில்லை. அதற்கு அதிகமாகவே உறைந்தது மகனை கல்லூரியில் சேர்த்தார். அவன் பி யூ.சி.யில் முதல் வகுப்பில் தேறினாலும் எஞ்ஜினியரிங் கல்லூரியை எட்ட முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. (அட்மிஷனுக்கு பத்தாயிரம் வேண்டுமே!) அந்தப் பையனும் அம்மா போட்ட சபதத்தை பொய்யாக்க விரும்பாதவன்போல் நண்பர்களுடன் போன ஒரு உல்லாசப் பயணத்தின் போது, விபத்தில் உயிரிழந்தான். அவன் அம்மா, இதையாவது என் இஷ்டப்படி நடத்த விடுங்க" என்று சொல்வதுபோல் மகன் இறந்த நான்கு நாட்களில் கணவர் எங்கேயோ போயிருந்தபோது, அவள் எண்ணெயை ஊற்றி தன்னையே கொளுத்திக்கொண் டாள். அவளைப்போல் உணர்வுகளும் சாம்பலாக, தனித்து விடப்பட்ட ராமையாவை தம்பிகள் மீண்டும் மொய்த்தார்கள். அண்ணனைத் தனியாய் தவிக்க விடலாமா...அவன் இன்சூரன்ஸ், ஜி.பி எஃப். கிராஜு விட்டி பணத்தை வைத்துக்கொண்டு தனியாக செலவழித்து அவஸ்தைப்பட வைக்கலாமா...இதில் அவனுக்கு ஒத்தாசை பண்ணாண்டாமா... ராமையா ஒத்தாசைக்கு இடம் கொடுக்கவில்லை. ஒரு மாதம் விடுமுறை போட்டுவிட்டு எங்கெல்லாமோ சுற்றிவிட்டு, இந்தப் பக்கமாக வந்தார். இந்தக் கோவிலில் சைவப்பழம் போல் தோன்றிய சாமியாரிடம் அழுது இர்த்தார். அந்தப் பெரியவர் ஈ. ஸ் வ ர ன் கி ட் ட வந்துட்டே... இனிமேல் எல்லாவற்றையும் அவன் பார்த் துக்குவான்' என்று சொல்லி அவருக்கு விபூதி பூசினார். ராமையாவுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. இப்போது அந்த வேலை எப்படி இருக்கோ... யார் பார்க்கிறார்களோ... சாமியாருடனேயே தங்கிய ராமையா, அவருக்கு பூஜையின்போது உதவினார். கால்களைப் பிடித்து