பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சு. சமுத்திரம் வள்ளியைப் பார்த்தார். அவள் நாணச் சிரிப்போடு அவரை நம்பிக்கையோடு பார்த்தாள். லிங்கத்தைப் பார்த் தார் அதன் விபூதிப்பட்டை, லிங்கநாதரின் வாய்போல மோனமாய் சிரித்தது. சுவாமி விவேகானந்தர் மாதிரி, மார்போடு சேர்த்து, கரங்களை மடித்து வைத்துக் கொண்டு சாமியார் அழுத்தமாகப் பேசினார். " நான் ஒரு வகையில சாமியார் என்றால் நீ இன் னொரு வகையில சாமியார்... என்னைவிட ஒசத்தியான சாமியார். சுயநலத்தில இருந்து முழுதும் விடுபட்டு, ஊருக்காக உழைக்கிறவன்தான் உசத்தியான சாமியார். ஆண்டவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வழி அமைச்சுக் கொடுக்கிறான். அந்த வழிக்கு நான் குறுக்கே நின்றால் அது ஆண்டவ விரோதம்! ஒன்னோட சேவையை மெச்சு றேன்... நீ வெற்றி பெற என் ஆசி! பேய்மனதின் ஆசை களை அறுக்கிறவன் தனிப்பட்ட சாமியார். ஏழைகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறவன் சமூகச் சாமியார். சமூகம் தனிப்பட்ட மனிதனைவிட உயர்ந்தது. வெற்றி வேல் வீரவேல்: குமரேசனும் ஒரு வகையில் சமரேசன் தான் அவன் ஒனக்கு அருள்பாலிப்பான்.' வேல்சாமி சாமியார் காலில் விழுந்து வணங்கினான். நெடுமரம்போல் பிரமித்து நின்ற வள்ளியின் காலைக் கிள்ளினான். அவளும், சாமியார் காலைத் தொட்டாள். இருவரும் கோவிலை விட்டு, மலைச்சரிவு வழியாக கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். வேல்சாமி, சிணுங் கியபடியே பின்தங்கி நடந்த வள்ளியை இடுப்போடு சேர்த்து அணைத்து, அவள் தலையில் செல்லமாகக் குட்டிக்கொண்டு போவதைப் பார்த்த சாமியார் மெல்லச் சிரித்துக் கொண்டார். பிறகு லிங்கத்தைத் திரும்பிப் பார்த்தார். அப்படியே உட்கார்ந்தார். அவர் மனதில எத்தனையோ எண்ணங்கள்... இறந்துபோன மகன்... இறக்காமல் இறந்துகொண்டு இருக்கும் இந்தத் தொழி லாளிகள். இங்கே கொட்டும் மழையிலும் கல்லுடைக்கும்