பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 29 தொழிலாளிகளையும், குளிரில் ஆடிக்கொண்டே வேலை பார்க்கும் சித்தாள் பெண்களையும் பார்க்க வேண்டும் போலிருந்தது. மெல்ல நடந்தார். ஒரு கிலோ மீட்டர் நடந்ததும், அணைக்கட்டுப் பகுதி, கண்ணில் பட்டது. அணைக்கட்டுக்கு மேலே இருந்த மலைப் பகுதியில் கற்சுவர்களிலான வீடுகளும், டெண்டு களும், கதவுகள் வழியாகத் தெரிந்த கட்டில் பீரோக்களை யும், டிரான்சிஸ்டர்களையும் பார்த்த சாமியார் கண்கள், மற்றொரு பக்கம் மலைச் சரிவில், தென்னங் கீற்றுக்களால் வேயப்பட்ட குடிசைகளைப் பார்த்தார். மிருகங்கள் தீண்டக் கூடிய-ஆற்று வெள்ளம் உயர்ந்தால் அடித்துப் போகக்கூடிய-அபாயப் பகுதி. அபயம் அளிக்க ஆளில்லா நிலைமை. வீடு என்ற பெயரில் பனை மட்டைகளே துரண் களாகவும், கோணியே வாசல் கதவுகளாகவும் கொண்ட கொசு வாச’ ஸ்தலங்கள். அங்கே நோயில் விழுந்த மனிதர்கள்... குச்சிக் கால், குச்சிக்கை பெண்கள்... மழைத் துறவில் அணைந்த அடுப்பைப் பற்ற வைக்க முடியாமல் தவிக்கும் பாமர ஜாதிகள். இவர்களுக்கு வேலை மட்டும் 'கேசுவல் அல்ல... வாழ்க்கையே கேசுவல்'தான். "ஈஸ்வரா...ஈஸ்வரா...பிள்ளைகளைப் பார்த்தாயா... பார்த்தாயா' என்று தனக்குள்ளேயே மந்திரம்போல் ஜபித்தபடி சாமியார் திரும்பி நடந்தார். 4. ஒரு மாதம் ஒடியிருக்கும். வேல்சாமியும். அவனுடன் பின்னிப் பிணைந்த பாட்டாளி வாழ்க்கை முறையும், சாமியார் மனதில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது