பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சு. சமுத்திரம் எப்போவாவது அணைக்கட்டுப் பகுதியில், வாழ்க ஒழிக கோஷங்கள் கேட்கும். ஒரிரு தடவை போலீஸ் ஜீப்புகள் போவதையும் பார்த்திருக்கிறார். என்னதான் நடக்கிறது என்பதைப் போய்ப் பார்க்கலாம் என்று குறுகுறுத்த மனதை, மாயையில் உழல்வதாக நினைத்து, பத்மாசனம் போட்டு, புருவ மத்தியைப் பார்த்து அடக்கினார். சர்வேஸ்வரனிடம் லோக நன்மைக்காக, அந்தரங்க சுத்தியோடு" பிரார்த்தித்துக் கொண்டார். வேல் சாமியைப் பார்க்க வேண்டும்போல் ஒரு எண்ணம் ஏற்படும்போதெல்லாம், கூடவே மாண்டுபோன தன் மகனின் நினைவும், அவன் பிரிவாற்றாமையால் உயிர் துறந்த மனைவி, மனைவியால் சேவகம் செய்யப்பட்ட தம்பிகள்-தம்பிகளை மட்டுமே பெற்றதாக நினைத்த தள் தாய்-அத்தனைபேரும் அவர்கள் சம்பந்தப்பட்ட ஒட்டு மொத்தமான நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகள் சுமந்த உணர் வுகளும் வந்தன. மீண்டும், லோக மாயையில் உழல அவர் விரும்பவில்லை. ஈஸ்வரனிடம் அர்ப்பணித்த உள்ளத்தை ஜல்லடை போட அவர் விரும்பவில்லை. ஆகையால் வேல்சாமி, தன் கண்ணில் படக்கூடாது என்றுகூட, தன் விருப்பத்திற்கு விரோதமாகவே பிரார்த்தித்துக் கொண் டார். பிரார்த்தனை பலித்தது-சற்று அதிகமாகவே. வழக்கம்போல், அதிகாலையில் பூஜைக்குப் புறப்பட்ட சாமியார், நிலவொளியில், கோவிலுக்குச் சற்று அருகே கூட்டம் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவராக, வேகமாக நடந்தார். அங்கே ஒரு பாறையில், வள்ளி கிடத்தப்பட்டிருந்தாள். அவள் கழுத்தில் சுருக்குக் கயிறு அவிழ்க்கப்படாமல் இறுக்கப் பட்டிருந்தது. நாக்கு, மகிஷாசுரவர்த்தினியின் தாக்கு போல், கோரமாக வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. கண்கள், விழிகள் விலகி உருட்டிய பாவத்துடன்,