பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 41 'கழுமரக் கட்டைபோல நிற்பார் களைய...இக் கயவர் வாய் மதம் முழுதுமே மண்கொண்டு போகவோர் மருந்தருள்க’ என்ற பாடலை, தன்னை மறந்து கூவினார். பாடுவது தெரியாமல் பாடினார். பல தடவை திரும்பத் திரும்பப் பாடினார். கைகளை யாசகம் கேட்பவர்போல் திருவோடு போல் வைத்துக்கொண்டு பாவத்தோடு பாடினார். பயத் தோடும், நயத்தோடும் பாடினார். பாடப் பாட அந்தக் குளிரிலும் அவருக்கு உடலெங்கும் வியர்வை பெருக் கெடுததது. கண்களும் வியர்த்தன. பிறகு குரலை, சன்னஞ்சன்னமாக அடக்கி, அப்படியே தியானத்தில் அமர்ந்தார். ஒரு மணி நேரமாகியும் அவர் கண் விழிக்காத தைப் பார்த்துவிட்டு அந்த முதியவள் தயங்கியபடியே நடந்து எங்கேயோ மறைந்தாள். நீண்ட நேரத்திற்குப் பிறகு, கண்விழித்த சாமியார் யதார்த்த நிலைக்கு வந்தார். அந்த முதியவளைக் காணாதது அவருக்கு ஆறுதலாகவும் இருந்தது. தன்னையே அதட்டிக்கொண்டார். ஒரு துறவி எல்லா வற்றையும் ஒரே சீராகப் பார்க்க வேண்டும்; இன்பமும் துன்பமும் அவனைத் தாக்கக்கூடாது. அவஸ்தை கொடுப்பவனையும் அதை வாங்குபவனையும் சர்வேஸ் வரன் பார்த்துக்கொள் வான். எனக்கேன் வம்பு? என் கடன் ஈஸ்வரப் பணியே. உறவுக்காரர்களே நன்றி கெட்டவர்கள் ஆனார்கள். பெற்ற தாயே மாற்றாந் தாயானாள். ரத்தத் தொடர்புள்ள உறவே, ரத்தத்தைக் கொதிக்க வைத்தபோது, யாரோ ஒருவருக்காக சிந் தனையை வீணடித்தல் தவறு. நன்றிகெட்ட உலகமிது. ஒரு மனிதனிடம் எத்தனை அணுக்கள் இருக்கின்றனவோ அத்தனை மனிதர்சளாக அவன் நடமாடுகிறான். இனி மேல் ஈஸ்வர சிந்தனையன்றி, எதுவுமே எனக்குத் தோன்ற லாகாது. ஈஸ்வரா... தோடுடைய செவியனே...