பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சு. சமுத்திரம் அருளாளா... அருள் வாய். பாம்புபோல் பின்னியிருக்கும், கிடா, பிங்கல நாடிகளை எழுச்சி பெறச் செய்து, சுழி முனை நாடியில் ஆன்ம ஒளி பாய்ந்து குண்டலியுடன் கூட்டி அருள்வாய்... உலக பந்தத்தை அறுத்தெறி! எரிதழலே! சாமியார் குடிசைக்குப் போக மறந்து அங்கேயே தூங்கிவிட்டார். கண்விழித்தபோது சிந்தனைச் சுமை சிறிது இறங்கியதுபோலிருந்தது. தொழு நோயாளி யையும், நடுத்தர வயதுப் பெண்ணையும், முதியவ ளையும், வேல்சாமியையும் வள்ளியையும் மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிவிட்டு, அருவியில் குளித்து முடித்துவிட்டு சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார். காலைப் பொழுது கலகலப்பாகிக்கொண்டிருந்தது... 'சாமி... என்னை தெரியாதுங்களா!' என்ற சத்தம் கேட்டு சாமியார், கோவிலுக்கு வெளியே பார்த்தார். பேண்ட்- அதுவும் பெல்பாட்டம் பேண்டுடன், டிசைன்கள் போட்ட பாலிஸ்டர் சிலாக்கோடு, ஒரு நாற்பது வயதுக்காரர் சிரித்துக்கொண்டு நின்றார். அவரை அடையாளம் காண முடியாதவர்போல் சாமியார் புருவத்தை உயர்த்தியபோது, அவர் மடமடவென்று ஒப்பித்தார். 'நான்தான் சாமி. சாரங்கன். ஆறு மாதத்துக்கு முன்னால இங்கே வந்து இரண்டு மாசம் முடங்கிக் கிடந்தேனே... ஞாபகம் இருக்கா? இப்போ ஒடிப்போன என் ஒய்ஃப்- அதுதான் சம்சாரம் திரும்பி வந்துட்டாள். ' பல் தெரியச் சிரித்த அந்த ஆசாமியையே சாமியார் மேனி சிலிர்க்கட் பார்த்தார், அவர் சொன்னதுபோல் ஆறு மாதத்திற்கு முன்பு தாடியும் மீசையுமாய் அழுக்