பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 43 கேறிய வேட்டியுடன் இதே இந்தக் கோவிலில் வந்து இரண்டு மாதம்வரை எழுந்தருளி, தேவாரம், திருவா சகம், திருவருட்பா போன்ற பாடல்களை மாறி மாறிப் பாடி, ஒடிப்போன மனைவியைத் தந்தருளும்படி ஈஸ்வர னிடம் முறையிட்டவர் இவர். ஒருநாள் யாரோ வந்து இவரை அழைத்துக்கொண்டு போனார். அப்போது போனவர் இப்போது வந்திருக்கிறார். மனைவியைத் திருப்பிக் கொடுத்த ஈஸ்வரனைத் திரும்பிப் பார்க்க வந் திருக்கிறார். நாளானாலும் பரவாயில்லை, நன்றி சொல்ல வந்திருக்காரே... சாமியார், அன்பு ததும்பக் கேட்டார். 'கோவிலுக்கு வந்தியா? தேங்காய் ஊதுபத்திய எங்கே?' நான் கோவிலுக்குன்னு வரல. சாமி. இங்க அணை கட்டப்போறாங்க பாருங்க. ஒரு காண்டிராக்ட் விஷயமா நேற்றே வந்தேன். இப்போல்லாம் நேரமே கிடைக்க மாட்டேங்கு சாமி. இன்னொரு நாளைக்கு செளகரிய மாய் வாரேன். வரட்டுமா சாமி. குளிக்கணுமுன்னு வந்தேன். அதுக்குள்ள இன்னொரு காரியம் ஞாபகம் வந்துட்டு... வாரேன் சாமி சாமியார் ஆச்சரியத்தில் இருந்து விடுபடுமுன்னா லேயே, அவர் போய்விட்டார். முன்பு விபூதி கொடுத் தால் 'நீங்களே பூசுங்க சாமி' என்று கேட்பவன் இன்று அவரை பூசக்கூடச் சொல்ல வேண்டாம், தட்டில் இருக் கும் விபூதியை எடுத்துப் பூசியிருக்கலாமே. சீச்சி. தப்பு. நேரமில்லாத மனிதன். விபூதி பூசுகிற நேரத்தில், டெண்டரைத் திறந்துவிட்டால்... சாமியார் யோசித்தார். இவன் ஈஸ்வரனிடமே நன்றியில்லாமல் நடந்து கொள்கிறானே... ஒரு தடவை ஒடியவள், இன்னொரு தடவையும் ஒடமாட்டாளா என்ன? ஈஸ்வரா... நான்