பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. சு. சமுத்திரம் ஒடணுமுன்னு சொல்லல. இரண்டுபேரும் நல்லா இருக் கட்டும். எப்படியோ அவள்பேர்ல சொத்தை எழுதி வச்சுட்டு, ஆப்பசைத்த குரங்குமாதிரி இருந்தவன் சந்தோஷமாய் இருக்கிறதுல சந்தோஷந்தான் ஆனாலும் ஈஸ்வரன்கிட்ட இப்படியா நன்றியில்லாமல் சாமியார் தன்னுள்ளே சிந்தனையை மீண்டும் அலசிப் பார்த்தார். "இந்த ஈஸ்வரனுக்கு, இவன் நன்றியில்லாதவன் என்பது தெரியாதா என்ன? தெரிந்துதானே இவனை இரண்டு மாதம் கொண்டு வந்து போட்டிருப்பான். தெரிந்துதானே மனைவியை மீட்டுக் கொடுத்திருப்பான்... இவன், தன்னைப் பார்க்க வராமல் அணைக்கட்டு வேலைக்காக வந்தவனை, இங்கே இப்போது கொண்டு வந்து விட்டவனும் ஈஸ்வரன்தானே. "அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று திருவாசகம் சொல்கிறது. அப்படியானால், இவன் அருளில்லாமல் அவன் இங்கே வந்திருக்க முடியுமா? நன்றி என்பது ஈஸ்வரனுக்கு அடுத்த படியான பெரிய வார்த்தை... நன்றி வந்தாலும் சரி, அதற்கு எதிர்மாறானது வந்தாலும் சரி. அவற்றை, சிவா அர்ப்பணமாக்கிவிட்டு, பலனை எதிர்பார்க்காமல் செயல் படுபவனே யோகி. அவனே ஈஸ்வர அருளுக்கு, தன்னை அருகதையாக்கிக் கொள்கிறவன். ஈஸ்வர அருள், போற்று பவனுக்கும், துாற்றுபவனுக்கும் ஒரே மாதிரி கிடைக்கக் கூடியது. அந்த அருளுக்கு, நாம் நம்மை தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டாமா என்பதுதான் உயிர்ப்பான தத்துவம், பாவம்! அந்த முதியவள் எப்படி இருக்காளோ? சொந்தத்தையே வீடாகக் கொள்ளாமல், சமூகத்தையே வீடாகக் கொண்டவனின் தாய் ஈஸ்வரன் நிச்சயம் வீடு' கொடுப்பான். இந்த காண்டிராக்டர்கள் மண்ணையும், கல்லையும் வைத்துக் கட்டுகிறார்களா, அல்லது மனித உடல்களை அடுக்கி, குருதியால் பூசுகிறார்களா?