பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ கனைக்காதது எப்படி கழுதையாகாதோ, அப்படி அந்த வீட்டுக்குள் போய் நாற்காலியில் உட்கார்ந்தோ அல்லது உரசிக்கொண்டு நின்றோ, வெற்றிலை பாக்கு போட்டு வெளியே வந்து கனைத்துக்கொண்டே துப்பி விட்டுப் போகாதவர்கள், ஊர்ப் பிரமுகர்களாக மாட்டார்கள். அன்றைக்குக் கொஞ்சம் வெத்தடி... வில்லடி செய்ய வேண்டியது இருந்ததால், பிரமுகர்களின் சென்ஸ்ஸை அந்த வீட்டுக்குள்ளேயே எ டு த் து க் கொள்ளலாம். சொல்லக்கூடிய கூட்டந்தான் என்றாலும், சொல்ல முடியாத, சுற்றி வளைத்த பேச்சுக்களிலேயே பிரமுகர்கள், சுற்றிச் சுற்றி நாக்காடினார்கள். அந்த வீடு ஒரு அரண்மனை மாதிரி. அந்தக் காலத்தில் இருந்தே காரை வீடு' என்று அழைக்கப்படுவது. நான்கு விக்கத்து மதில் சுவர்களுக்கு மத் தியில் நடுநாயகமாக இருந்த அந்த வீடு, சமதரையில் இருந்து மூன்றடி உய சமதளத்திற்கு மேலே, கிட்டத்தட்ட தாஜ்மஹால் மாதிரியே தோன்றும். அந்த வீட்டுக்குள் போகிறவர்கள் முன்னேறலாம் என்று சொல்லாமல் சொல்வதுபோல், நான்கைந்து படிக்கட்டுகளில் ஏறித்தான் போகவேண்டும்.