பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 51 காம்பவுண்ட் சுவருக்கு அருகே, பூவரசு மரக் கட்டையை பொன்னையா கோடரியால் விறகுகளாகக் கீறிக் கொண்டிருந்தார். முந்தாநாள் நடந்த அம்மன் 'குடையில் சுடலை மாடசாமியாக, சல்லடங்குல்லாய் தரித்து, வெட்டரிவாளை வைத்துக்கொண்டு, முறுக்குத் தடியைப் பிடித்துக்கொண்டு, வேட்டைக்குப் புறப்பட்ட போது, அதோ அந்த முகப்பறையில் கூடியிருக்கும் பிரமுகர்கள் அனைவரும் இவரை விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கினார்கள். இப்போதோ இவர் விழுந்து விழுந்து வெட்டுவதைப் பார்த்து, தத்தம் முகங்களை அலட்சியமாக வெட்டிக்கொள்வதுபோல் தோன்றியது. இந்தச் சாமியாடிக்கும் ஊர்ப்பிரமுகர்கள் தன்னைக் கும்பிட்டதுதான் ஞாபகம் வருகிறதே தவிர, இதர ஏழை பாழைகள் கும்பிட்டது. நினைத்துப் பார்த்தால்கூட வராது போலிருக்கிறது. அன்று வந்த ஜனம் மெச்ச' ஆடியவர் இப்போது வயிறு மெச்சுவதற்காக கோடரியை .ைத்துக்கொண்டு மேலும் கீழுமாக ஆடுகிறார்கிட்டத்தட்ட கோவிலில் ஆடியது மா கிரியே. அன்றைக் காவது, வாழைப்பழம், புண்ணாக்கு முதலியவற்றை சாமியின் பெயரில் சாப்பிட முடிந்தது. இன்றைக்கு அதுவும் இல்லை. அண்ணாச்சி... இன்னைக்கி ஒரு முக்கியமான விஷயம் நடககப் போவுது. கொஞ்சம்... கொஞ்ச நேரந்தான் விறகு கீறணும் வருவியளா...' என்று வீட்டுக்காரி ரா ச ம் மா சொன்னபோதே பொன்னையா புரிந்துகொண்டார். கூலி கிடையாது. போனஸ் வெட்டு. தொலைவில் ஒரு மூட்டைக் கோதுமை மாவை கொட்டி விட்டு, அதைக் கையால் தளம் முழுக்கப் பரப்பிக் சொண்டிருந்த மனைவியைப் பார்த்து, "கொஞ்சம் தண்ணி கொண்டு வான்னு எத்தன தடவழா சொல்றது? எருது நோவு காக்கைக்கு தெரியாததுமாதுரி, என் தாகம் ஒனக்குத் தெரியல பாரு' என்று பொன்னையா சீறினார். அவளும் பதிலுக்குச் சீறியிருப்