பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சு. சமுத்திரம் பாள் காலங் காத்தாலயே தலமறவா போயிடுமுன்னு சொன்னேனே, கேட்டீரா...நல்லா படும். ஒம்மா புத்தி தான ஒமக்கும் இருக்கும்’ என்று நெஞ்சுக்குள் இருந்ததை வாய்க்குக் கொண்டு வரத்தான் போனாள்... ஆனால் பிரமுகர்களைப் பார்தததும், சொல்ல வந்ததை விழுங்கிக் கொண்டாள். 'வீட்டுக்கு வரட்டும்...' வீட்டுக்கு மூத்த 'பிள்ளையான தங்கப்பாண்டி சுவரோடு ஒட்டிப் போட்டிருந்த தேக்குக் கட்டிலில் உட் கார்ந்துகொண்டு, தொங்கப் போட்டிருந்த கால்களை ஆட்டிக்கொண்டு, கட்டில் காலின் உருண்டு திரண்ட மேல் பாதியை, வலது கையால் தேங்காயை திருவுவது மாதிரி திருவிக் கொண்டிருந்தார். நாற்பத்தெட்டு வய திருக்கும். கழுத்தில் 'எட்டு பவுன் தங்கச் செயின் தொங் கியது. புலி நகம் போட்ட செயின். மேஜை இல்லாமலே, ஒரு நோட்டுப் புத்தகத்தை வசதியாக வைத்து எழுது மளவிற்கு, வயிறு பருத்தும் பெருத்தும் வசதியாக இருந்தது. அவருடன் கிராம முன்ஸிப் மாடக்கண்ணு நெருங்கி உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகே, தங்கப் பாண்டிக்குப் பெண் கொடுத்த மாமனாரான எழுபது வயதுக் கிழவர் ஆறுமுகம், ஜரிகைவேஷ்டி கட்டி, கழுத்தில் மேரியல் போட்டு, சாவும்போது வசதியுள்ள வர்களை சிங்காரிப்பார்களே, அப்படிப்பட்ட சிங்காரத் தில் இருந்தார். அவரையடுத்து, சில பண்ணையார்கள் குறுக்கும் நெடுக்குமாக உட்கார்ந்திருந்தார்கள். கட்டி லுக்கு எதிர்த்தாற்போல் போட்டிருந்த நாற்காலிகளில் முதல் நாற்காலியில் இளைய பிள்ளை' ராஜலிங்கம் பேண்ட் சிலாக்கோடு உட்கார்ந்திருந்தார். போனதடவை ஊருக்கு வந்திருக்கும்போது, வெள்ளவெளேரென்று தெரிந்த தலைப் பகுதி, இப்போது 'கரு கருப்பாய்' இருப்பதற்கான காரணம் புரியாமல் பல கிழவர்கள் வியங்கினார்கள், ஒரு சிலருக்கு தங்களுக்கு 'கண் கெட்டுப் போயிருக்குமோ என்று சந்தேகம். இன்னும் ஒரு சிலருக்கு