பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 53 கண்ணாடி போட்டதால், தங்களின் 'வெள்ளெழுத்து’ நோய் போய்விட்ட திருப்தி. ராஜலிங்கத்திற்கு அருகே, கர்ணம், மளிகைக் கடையில் கருப்பட்டியைச் சுற்றிக் கொடுக்க வைத்திருக்கும் அசிங்கமான தாள்கள் மாதிரி, ஒரு கட்டுக் குப்பைக் காகிதங்களை கசக்கிப் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். அடிக்கடி, அதைப் பிரித்துப் பிரித்துப் படித்துக்கொண்டார். அடங்கல் பட் டாவாம்'. இங்கேயும் கர்ணம் முன்வnப்புக்கு எதிரே தான் இருந்தார். அவரையடுத்து, ராஜலிங்கத்தின் மாமனார் சுருட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு காலைத் துரக்கி நாற்காலிச் சட்டத்தில் போட்டுக் கொண்டிருந்தார். அவரை யடுத்து, 'மற்றும் பலர்". தங்கப்பாண்டியின் மனைவி ராசம்மா, அங்குமிங்கு மாகச் சுற்றிக் கொண்டிருந்தாள். ராஜலிங்கத்தின் மனைவி மேரி புஷ்பம், ஒரு பொய்க் கொண்டையில் இலை தழையோடு கூடிய ஏதோ ஒருவித பூ மொந்தையை வைத்துக்கொண்டு, நரசிம்ம அவதாரம் மாதிரி, வாசல் படியில் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றாள். இந்த ராஜலிங்கம் திருநெல்வேலியில் கலெக்டர் ஆபீஸில் சேர்ந்தவுடனேயே அந்தக் காலத்தில் பத்திர காளியம்ம னாக சாமியாடிய தாத்தாவின் சம்மதத்துடனேயே, ஜோசப் டேவிட்டாக மாறி, குலதெய்வமான சுடலை மாடசாமி கோவிலில் மணமகள் வீட்டாருக்குத் தெரி யாமலே பூஜையும் போட்டுவிட்டு, அப்புறம் பணக்கார வம்சத்தைச் சேர்ந்த மேரி புஷ்பத்தை சர்ச்சில் பிடித்தார். முதல் பிள்ளை நான்கு வயதில் சற்று இழுத்து இழுத்து நடந்ததால், சுடலை மாட சாமியின் கோபத்தைத்' தணிக்கும் வகையில் 'கொடைக் கு' 'வரி கொடுத்ததோடு, சாமிக்கு வேட்டிகூட எடுத்துக் கட்டினார். சர்ச்சுக்குப் போவதைக் குறைத்தார். என்றாலும், இரண்டாவதாகப் பிறந்த பெண்ணும் மூளைக்கோளாறு உள்ளவள்போல் தோன்றியதும், பாதிரியாரிடம் போய் பாவமன்னிப்பு'ப்