பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சு. சமுத்திரம் பெற்றார். அப்படியும் மூன்றாவது பிறந்த பையன் ஒரு வருடத்திற்குள் 'துள்ளத் துடிக்க இறந்ததும் மீண்டும் சுடலை மாடசாமியிடம் வந்தார். இப்போது சர்ச்சுக்கு ஜோஸப் டேவிட்டாகவும், சுடலைமாடனுக்கு ராஜலிங்க மாகவும் அவரால் நட மாட முடிகிறது. பேச்சை எப்படித் துவக்குவது என்று ஒவ்வொருவரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, மேரி புஷ்பம் தன் எட்டு வயதுப் பையன் ஜாய்ஸ்லினைப் பார்த்து, 'இவங்களுக்கு ஒரு பாட்டுப் பாடிக் காட்டுடா' என்றாள். அந்த எட்டு வயதுப் பொடியன் டிவிங்கில்... டிவிங்கில் லிட்டில் ஸ்டார்' என்று சொல்லிக்கொண்டு கைகளை மேல்நோக்கிக் குவித்து, கால்களை ஆட்டினான். உடனே தரையில் பால் டப்பாவை எடுத்து வைத்துக் கொண்டு மேளம் அடித்துக் கொண்டிருந்த தன் பெரிய மைத்துனர் தங்கப்பாண்டியின் மகன் குமாரை, ஓரக் கண்ணால் பார்த்துக்கொண்டே 'ஜாய்ஸ்லின், இந்த குமாருக்கு ஒரு மாசந்தான் சின்னவன். ஒரு மாசமா... ரெண்டு மாசமா... ஆமாம்... ஒரு மாசந்தான். இவன் ஜூன். அவன் ஜூலை...' என்றாள் மேரி புஷ்பம். ஒரு மாதம் முன்னால் பிறந்த குமாரால், இப்படிப் பாட முடியுமா என்பதுபோல் அவன் முகத்தை பாவமாக" வைத்துக் கொண்டபோது, பொன்னையாவிடம் அந்தா கிடக்கே... வாதமசக்கி... ஆயும்... கொஞ்சம் கீறுனா போதும்', என்று சொல்வதற்காக படியிறங்கிய ராசமமா, அங்கேயே நின்றாள். அவளையும் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது. குமார் பயலோ, எதுவும் நடக்காதது போல் பல்லைக் கடித்துக்கொண்டே டின்னை அடித்தான். "டிவிங்கிலை முடித்துவிட்ட ஜாய்ஸிலின், அம்மாக் காரி மேரி புஷ்பத்தைப் பார்த்தான். உடனே அவள் 'டிராட்...டிராட், பாடு' என்றாள். பேபி கோஸ் டு