கேள்வித் தீ55
ஸ்கூல்... டிராட்... டிராட்’ என்று துவங்கும் ஆங்கிலப் பாடலை கிட்டாம்பட்டி ‘ஆக்ஸன்னோடு’ பையன் பாடிக் கொண்டிருந்தாள். அவன் கையை ஆட்டிய விதமும், காலைத் துக்கிய லாகவமும், கவர்ச்சியாகத்தான் இருந்தது பிரமுகர்கள் மகிழ்ந்து போனார்கள்.
“பலே... நீதாண்டா ஒங்க தாத்தா பேர எடுத்தால் எடுக்கணும்” என்றார் முன்ஸீப். அப்போது ராஜலிங்கமும், தங்கப்பாண்டியும், அவரைப் பார்த்து லேசாக முறைத்தார்கள்.
“அவரு இவனுக்கு எம்மாத்திரம்வே? நம்ம முன்ஸீப்புக்கு இக்கன்னா போடத்தான் தெரியும்... யார் யார் எப்படின்னு சொல்லத் தெரியாது... நம்ம குமார் கலெக்டரா வரப்போறான் பாருங்க...” என்றார் கர்ணம், கையில் இருந்த அடங்கல் பட்டாவை ஆட்டிக்கொண்டே !
“எல்லாம் வளப்புல இருக்குவே... இவன் மேரி புஷ்பத்தோட மகனாச்சே...” என்றார் இன்னொரு கிழவர்.
ஜாய்ஸ்லின் பயலுக்கு எப்படியோ, மேரி புஷ்பத்திற்கு பெருமை பிடிப்படவில்லை. “ஜாய்ஸ்... ஓல்ட் விச் ஸ்டோரியச் சொல்லு பார்க்கலாம்” என்றாள். அந்தப் பயல் இப்போது ‘ஓல்ட் விச்’ கதையைச் சொல்லாமல், இன்னமும் ‘மேளம்’ அடித்துக் கொண்டிருந்த பெரியப்பா மகன் குமாரைப் பார்த்து “காலையில் உதச்சியே, இப்போ பைட்டுக்கு வாரீயாடா... பேஸ்டர்ட் தேவடியா பிள்ளா” என்று சவாலிட்டு குமாரின் கையைப் பிடிக்கப் போனதுடன், பிரபல பத்திரிகைகளில் கூடப் பிரசுரிக்க முடியாத கெட்ட வார்த்தைகளை, மேற்கொண்டும் பேசிக்கொண்டே போனான்.