பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 63 'சம்மதமில்லாட்டா இந்நேரம் அவள தடுத்திருப் பேனே...எனக்கும இந்த ஊர்ல ஒரு பிடிப்பு இருக்க ண் டாமா? நிலத்தை குத்தகைக்கு அடச்சிடலாம். ஊருக்கு வராமலே நெல்ல வாங்கிக்கலாம். ஸ்கூல் எனக்குன்னா, நான் அடிக்கடி வரலாம். பிறந்த மண்ண மறக்க மாட்டேன்.' 'ஒனக்கு, ஒன்கூட பிறந்தவனவிட, மண்ணு பெரிசா யிட்டு' 'ஒனக்கு, நான் இந்த ஊருக்கு வரப்படாதுன்னு ஒரு எண்ணம் வந்துட் டு. ’’ 'ஏய்... பள்ளிக்கூடம் யார் பேருக்கு இருந்தா என்ன டா?' ' 'அப்படீன்னா, என் பேருக்கே இருக்கட்டுமே." இதுவரை பேசாமல், சும்மா வெறும் வாயை மென்று கொண்டிருந்த கீழத்தெரு மணிமுத்து ஆவேசமாய் பேசினார். அவருடைய அய்யா கூடப் பிறந்த அத்தையைத் தான் பள்ளிக்கூடத்தை ஏற்படுத்திய சுடலைமாடனுக்கு கொடுத்திருந்தது. அத்தைக்காரியை, மாடன் அப்புறம் தள்ளிவைத்து விட்டாலும். மணிமுத்து, தன்னை அந்த வீட்டுக்குள் அடிக்கடி தள்ளிக்கொண்டு வருபவர், உணர்ச்சிப் பிழம்பாகப் பேசினார். இவ்வளவுக்கும் அண்ணன்-தம்பி இ ரு வ ரு ம் சுடலைமாட னின் "இளையோடியாள் பிள்ளைகள். அவர் அத்தை பிள்ளை பெறுவதற்கு, சுடலைமாடன் வாய்ப்பே கொடுக்காமல் தள்ளி வைத்து விட்டார். "பூனைங்க ரொட்டிக்கு சண்டைபோட்டு, குரங்கு கிட்ட போன கதை மாதுரி பண்ணிப்படாதிங்கடா...எங்க அத்த புருஷன் அஞ்சி படிச்சிட்டு, அப்புறம் எதையோ ஒன்னப் படிச்சிட்டு, திண்ணயில பள்ளிக்கூடம் ஆரம் பிச்சது இன்னும் ஞாபகமா நெஞ்சில இருக்குடா... அவரு,