பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 65 பள்ளிக்கூடமே பழின்னு கிடக்கிற என்கிட்ட இருந்து அத பிடுங்கினால் நான் இருக்கதுல அர்த்தமில்ல. இந்த சனியன் பிடிச்ச பள்ளிக்கூடத்துக்கா வ என்ன பாடெல் லாம் பட்டிருக்கேன்.' மேரி புஷ்பம், கணவனைப் பார்த்துக் கேட்டாள்: ஏன் பேசாமல் இருக்கீங்க? நீங்க மட்டும் கலெக்டர் ஆபிஸ்ல இல்லாட்டா, இவரு...டெப்டி இன்ஸ்பெக்டர அடிச்சதுக்கு...ஜெயிலுக்கு போகாம இருக்க முடியுமா? வாத்தியாருங்க கொடுத்த மனுவால குளோஸாகப் போன பள்ளிக்கூடத்த, நீங்க மட்டும் இல்லாட்டா திறந்திருக்க முடியுமா? பணம் வாங்கிக்கிட்டு மத்தியானச் சாப்பாடு போடாததுக்கு, பீ. டி. ஒ. ரிப்போர்ட் பண்ணினார். நீங்க அவருகிட்ட போய் பேசாட்டா பள்ளிக்கூடம் இருந்திருக்குமா? வாத்தியாருங்க எழுதிப் போட்ட மொட்ட மனுக்காக டி.இ.ஒ. ஆபிஸ்ல போய்ப் பார்த்து, அந்த மனுக்களயே இவருகிட்ட கொண்டுவந்து காட்டாட்டா...இவருதான் மொட்ட மனு வாத்தியா ருங்கள, அடையாளம் கண்டு அவங்கள நீக்கி இருக்க முடியுமா? அ வ ங் க தா ன் அடங்கியிருப்பாங்களா? இதுக்காக ஒங்க கைல இருந்து எவ்வளவு காசு செலவாகி இருக்கம்? சொல்லுங்க ராசம்மா வாயைத் திறந்தபோதே, ஆவி வெளி யேறியது. 'சும்மா அப்பாவி வாத்தியானை ஏமாத்திப் பிடலாமுன்னு பாக்கியளோ...அதுதான் நடக்காது...எதக் கொடுத்தாலும் கொடுப்போம்...பள்ளிக்கூடத்த மட்டும் கொடுக்க முடியாது...' 'ஒனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பாடஞ் சொல்லிக் கொடுக்க வேணடிய வாத்திமார்களை வீட்டு வேலைக்கு ஏவ முடியாது பாரு...கோதுமையைக் காயப் போட முடியாது பாரு...எண்ணை டின்கள, அடுக்கடுக்கா பு.-5