பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சு. சமுத்திரம் அடுக்க முடியாது பாரு... இதுக்குமேல வளையல் பண்ண முடியாது பாரு..கஸ்டமாத்தான் இருக்கும். ஒன் வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாச்சு. ஒரு நல்ல சாப்பாடு உண்டா? நேத்து வச்ச குழம்ப இன்னைக்கு ஊத்துற. பள்ளிக் கூட த்துக்கு வார கோதுமையில ஒரு படியாவது கொடுத் திருக்கியா? பள்ளிக்கூடம் எங்களுக்குத்தான் வேனும் கர்ணம் வாயைத் திறந்தார்: "நான் ஒண்னு சொல்றேன். ந - க்க முடியுறதத்தான் சொல்லப் போறேன்!' "நீரு திருஷ்டி சுத்தணுமுன்னு சொன்னவுடனேயே எல்லாம் நடந்தாச்சு. இனும் என்னத்தவே பேசறதுக்கு இருக்கு?' என்றார் சமயம் பார்த்திருந்த முன்சீப். கர்ணம், அழுத்தந் திருத்தமாகப் பேசினார்: ‘'எதுக்கு வீனா அடிச்சிக்கிடுறிய. பேசாம மேனேஜ்மெண்ட் கமிட்டி போட்டுறலாம். இவங்க ரெண்டுபேரோட நான், நம்ம முன்சீப்பு, இவரு கந்தசாமி மச்சான், இன்னும் ரெண்டுபேர்னு போட்டுட்டா வம்பில்ல. அதோட பள்ளிக்கூட இடம் பட்டா நிலம் இல்ல. நத்தம் புறம் போக்குத்தான் .' கிராம முன்சீப், கர்ணத்தை முதல் தடவையாக குளிர்ச்சியாகப் பார்த்தபோது, ராஜலிங்கத்தின் மாமனார், மருமகன் சார்பில் 'எவ்வளவு மொய் வேணு முன்னாலும் வாங்கிக்கட்டும். பள்ளிக்கூடத்த தந்தி டனும்' என்றார். உடனே தங்கப்பாண்டியின் மாமனார், 'நான் இப்பவே இந்த இடத்துலயே ரூபாய் தாரேன். பஞ்சா யத்துல எவ்வளவு சொல்றாவுளோ, அவ்வளவையும் தாரேன். ஆனால் பள்ளிக்கூடம் இவருக்குத்தான்' என்றார்.