பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 67 'ஒருக்காலும் தரமுடியாது. நீங்க தலைகீழ நின்னா லும் தரமுடியாது' என்றார் தங்கப்பாண்டி. ராஜலிங்கத் திற்கும் கோபம் வந்தது. "உடன் பிறப்பை உற்றுப் பார்ததார். 'அந்தக் காலத்துலயே, நான் காலேஜ் படிக்கையில், எங்கண்ணன் இவனை எப்படிப் படிக்க வைக்கலாம். என்னை எஸ் எஸ். எல்.சில விட்டுட்டு இவனுக்கு மட்டும் காலேஜா'ன்னு கேட்டவன். அப்போ இருந்த பொறாமப் புத்தி இன்னும் போகல! இவன் வாத்தியா னுக்கு மானேஜர் அந்தஸ்து வேணுமுன்னு நினைச்சால், நான் ஆபிஸர் கேட் சுறதுல என்ன தப்பு?’’ கந்தசாமிக் கிழவர் கிட்டத்தட்ட சாபமிட்டார். தங்கச்சி மகன் விவகாரம், சாபத்தின் குரலை வலுவாக் கியது. 'ஏ ராஜலிங்கம்! காலேஜ்ல பணம் கட்ட, வாத் தியாருங்க வாயில அடிச்சு, அந்தப் பணத்த, காலேஜுக்குக் கொண்டுக்கிட்டு வந்தவண்டா ஒங்கண்ணன்! அப்படிப் பட்ட உத்தமனை பொறா ைமக்காரன்னு வாய்க்கு வந்தபடி பேசா தடா சொந்த அண்ணண்டா. வச்சிட்டுப் போட்டுண்டா...' "பூனைக்கதை சொன்ன மணிமுத்து மீண்டும் பேசினார். ' எங்க அத்தய தள்ளிவச்ச பாபம், இப்படி வந்து நிக்குதுன்னு நெனக்கேன். ஏய் சொல்றதக் கேளுங்க்டா. திருவுளச்சீட்டு போட்டுப் பார்க்கலாம் ' 'அதெல்லாம் முடியாது. என்னைக் கொன்னுட்டு வேணுமுன்னா அவன் ஸ்கூல எடுத்துக்கட்டும்.’’ மணிமுத்து இறுதியாகப் பேசினார். "சரி...இதுக்கு ஒரே வழிதான். பேசாம ஏலம் போடறேன். ஏலுறவன் எடுத்துக்கட்டும்.'