பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 69 'விட்டுடுங்க... அவரு மவராசனா வச்சுக்கட்டும்...' ராசம்மா பதிலளித்தாள். 'மவராசனா வச்சிக்கல... முப்பதாயிரம் ரூபா பேசி வச்சிக்கிடுறோம்!' ராஜலிங்கம் மனைவியின் கையை வாயிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கிக் கொண்டு மேற்கொண்டு கேட்கப் போனார். அங்குமிங்குமாக முண்டினார். ஆனால் அவள் கை அவர் வாயிலிருந்து அகலவில்லை. மணிமுத்து மூணாந்தரம் பள்ளிக்கூடம் தங்கப் பாண்டிக்கு' என்று முடித்தார். செட்டில்மெண்ட் பத்திரம் எழுதப்பட்டது, மானேஜ் மெண்ட் ஏலத்தை எழுதினால் தப்பு வரும் என்பதால், மொட்டையாக மானேஜ்மெண்ட்டும் அது சம்பந்தமான சொத்தும் இப்போது இருப்பது போலவே தங்கப்பாண்டி யிடம் இருக்கும் என்று எழுதப்பட்டது தங்கப்பாண்டி வீட்டுக்குள்ளும் வெளியேயும் போய், அரைமணி நேரங் கழித்து வந்து, தம்பியிடம் பத்தாயிரம் ரூபாயை நீட்டி னார். 'tதிய அப்புறமா தாரேன். நம்பிக்கை இருக்கா இல்லியா...?' என்று அவர் கேட்டபோது, மேரி புஷ்பம் 'இன்னையோட உறவு முறிக்கதுக்கு நீங்கதான் பாக்கிங்க. தாங்க அப்படி நினைக்கல...' என்றாள். எல்லாம் முடிந்தது. சில இனிப்பு வகையறாக்களையும், கார வகையறாக்களையும் சாப்பிட்டுவிட்டு, எல்லோரும் போய்விட்டார்கள். - சிறிது நேரத்தில், தென்காசிக்கு வாடகைக்குப் போயிருந்த டாக்சி வந்தது. ராஜலிங்கம், மனைவி மக்க ளோடும், மாமனாரோடும் காரில் ஏறிக் கொண்டார். ராசம்மா எட்டிப் பார்க்கவில்லை. தங்கபாண்டி வந்தார். அவரும் ஒப்புக்கு வந்தவர்போல் அவர்களைப் பார்க் காமல், தொலைவில் தெரிந்த பள்ளிக்கூடத்தைப் பார்த் தார்-ஏலத்தில் கேட்ட பணத்தை அங்கே புதைத்து வைத்திருப்பவர்போல.