பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. சு. சமுத்திரம் உருப்படியாகக் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் "நான்கடி’ வாணம் வெட்டப்பட்டு காரை, சுண்ணாம்பு, கருங்கல் முதலியவற்றோடு துவக்கப்பட்ட கட்டிடந்தான் இது இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வடக்கு ஊரில்" கிறிஸ்தவ மிஷின் பள்ளிக்கூடம் ஒன்று துவக்கப்பட்டதும் தெக்கூர் காரர்களான இ ந் த ப் பகுதி மக்கள், தாங்களாகவே பணங் கொடுத்து. சுடலை மாடனை கட்டிடம் கட்ட ச் சொன்னார்கள். அதற்கு முன்பு, நான்கு திண்ணையில்தான் வகுப்புகள் நடந்தன. மாடன், கட்டிடத்திற்கு கால் போட்டபோது, அவரது தந்தை இசக்கி, "எனக்கு ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு சமாதி கட்ட ஒனும்' என்றார். அந்தக் காலத்தில், வசதியுள்ள வயதானவர்களுக்கு உயிரோடு இருக்கும்போதே, குழி வெட்டப்பட்டு சுற்றிலும் சுவரெழுப்பி நினைவுச் சின்னம் எழுப்பி வந்தார்கள். தந்தைக்கேற்ற மகனான சுடலைமாடன், பள்ளிக்கூடம் கட்ட வைத்திருந்த கருங் கல்லையும், காரையையும் எடுத்து, அப்பனுக்குச் சமாதி கட்டிவிட்டார் பள்ளிக்கூடத்தை வெறும் மண்ணை வைத்து எப்படியோ, ஒப்பேத்தி விட்டார். இப்படி எடுத்த எடுப்பிலேயே சமாதி தானம்' செய்த பெருமை, அந்தக் கட்டிடத்திற்கு உண்டு இன்னும் பெரிய அளவில் இதே மாதிரியான தானத்தை வழங்குவதற்கும் அது தயாராக இருப்பதுபோல் தோன்றுகிறது. எப்படியோ, மண்ணாய் போனவர் காரைக் கட்டிடத்திலும், மாணவ மாணவியராய் போனவர்கள், இந்தக் கிழட்டுக் கட்டிடத் திலும் இருக்கிறார்கள். ஆறாவது வகுப்பும், ஐந்தாவது வகுப்பும், அவற்றின் 'பி செக்ஷன்களும கூரைக் கட்டிடத்தில் பாதியிட த்தை ஆக்ரமித்திருந்தன. ஆறாவது வகுப்பின் இரண்டு செக்ஷன்களும், ஒரே செக்ஷனாக்கப்பட்டிருந்தது. காரணம், ஏ. செக்ஷனின் ஆசிரியர் கோவிந்தன், தங்கப் பாண்டியனின் மச்சான். ராசம்மாவின் அண்ணன்.