பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 73 அடிக்கடி டவுனில் ‘ஏ’ படம் பார்க்கப் போகிறவர். எப்போது வருவார், அப்படியே வந்தாலும், வகுப்புக்கு வருவாரா என்பதைச் சொல்ல முடியாது. இன்றைக்குச் சம்பள தினம். நிச்சயம் வருவார். மானேஜர் அறைக்கா வது வருவார். இந்த செக்ஷன்களை ஹரிஜனப் பெண்ணான மாரியம்மாள் கவனிக்கிறாள். 'பி' செக்ஷன் ஆசிரியை வடிவு 'மெட்டர்னிட்டி' வீவில் போய்விட்ட தால், லீவ் வேகன்சியில் வந்திருப்பவள் சமீபத்தில்தான் அவள் டீச்சர் ட்ரெயினிங்கை முடித் திருந்த ஸ் தான் கற்ற 'பேசிக் டிரெயினிங்படி நிற்பவள்போல், பாடம் நடத்தினாள். பருத்தி எங்கே விளையும் என்று ஒரு கேள்வி யைப் போட்டுவிட்டு, அதை மாணவர்கள் வாயி லிருந்து பறிப்பதற்காகக் காத்திருந்தாள் பருத்தி, எந்த மண்ணில் ஏன் விளைகிறது என்று சொல்லி ’பூகோளத்தையும் விளைந்த பருத்தியை எப்படிப் பிரித்து நூற்கிறார்கள் என்று கேட்டு விஞ்ஞானத'தையும், இந்தப் பருத்தியானது பண்டைக் காலத்தில் எப்போது, எங்கெங்கே விளைவிக்கப்பட்டது, என்ன மாதிரி ஆடை களாக அணியப்பட்டது என்பதைச் சொல்லி சரித்திரத் தையும் பாரி மகளிர் கொடுத்த நீலச் சிற்றாடையை, ஒளவையார் எதனுடன் ஒப்பிட்டார் என்று கேட்டு விளக்கி 'தமிழையும் ஒரு ஏக்கரில் எவ்வளவு பருத்தி விளையும் என்று சொல்லி கணக்கையும் பருத்தியின் ஆங்கில வார்த்தையைக் கேட்டு ஆங்கிலத்தையும்' சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அவள் திட்டம். திட்டத்தை அவள் செயல்படுத்த கேள்வியாக்கியபோது, ஒரு சிறுமி 'டீச்சர்...இவன் என் முதுகைக் கடிக்கான்' என்றாள். அந்தச் சிறுமிக்குப் பின்னாலிருந்த பயலோ 'நான் கடிக்கல டீச்சர். முகத்த வேறுபக்கமா வைக்க இடமில்ல டீச்சர். இவளை "கூன்' போட்டு உட்காராண் 1.ாமுன்னு சொல்லுங்க டீச்சர்' என்று டீச்சருக்கே