பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 79 அரசியல்வாதிங்க நாட்டை ஏலம் போடறாங்க. எல்லாமே ஏலமயமாயிட்டு. நம்ம நாட்டுப் பாடலுல ஏலேலோ ஐலஸா'ன்னு ஒரு பாட்டுவரும் பாருங்க... அந்தப் பாட்டை எல்லோரும் வேற மாதிரி புரிஞ்சிக் கிட்டது மாதிரி தோணுது. வசதியுள்ள வங்கெல்லாம், வசதியப் பெருக்கிக்க ஏலம் போடுறதுனால, ஏழைங்க தங்களோட வயித்த ஏலம் போட வேண்டிய காலமா போயிட்டுது. இந்தப் பொன்னையா இப்பத்தான் வந்து புலம்பிட்டுப் போறான். நாலு மணிநேரம் விறகு வெட் டுனானாம். மூனுபைசாகூடக் கொடுக்கலியாம். சரஸ்வதி தினமும் மாட்டுத் தண்ணி எடுத்து ஊத்துறாளாம். ஒரு ஏழப் பொண்ணுக்கு வேலை போட்டு கொடுத்ததுக்காக இப்படியா கொத்தடிமையா நடத்துறது? சரஸ்வதி... நான் ஒன்னோட வயசுல பெரியவன். என் மகளவிட வயசில சின்னவள் நீ. நான் சொல்லுததை தப்பா நினைக்க மாட்டியே?’’ 'உங்க வாயில தப்பித் தவறி தப்பு வந் தாக்கூட அந்த தப்புகூட தன்னச் சரிக்கட்டிக்கிட்டு நல்லதா வரும். சும்மாச் சொல்லுங்க.' "எப்படிச் சொல்றதுன்னு புரியல. சரி...எப்படியும் சொல்லித்தான் ஆகணும். ஒப்பன் வேணுமுன்னா விறகு கீறட்டும் ஒம்மா வேணுமுன்னா கோதுமை புடைக் கட்டும ஒன் தம்பி வேணுமுன்னா மாட்டக் கட்டட்டும், ஆனால் நீ தங்கப்பாண்டி வீட்டுக்குப் போகக்கூடாது. ஊர்ல நாலுபேரு நாலு விதமாச் சொல்லு தாங்க. ' 'என்ன சார் நீங்க தராதரம் தெரியாம...அவரு எனக்கு அப்பா மாதிரி...' தராதரம் தெரிஞ்சதாலத்தான் சொல்லுறேன். இன்னொருத்தின்னா சொல்லமாட்டேன். தங்கப் பாண்டிய...நீ அப்பா மாதிரி நினைக்கலாம். அதனாலயே