பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சு. சமுத்திரம் அவன் உன்னை மகள் மாதிரி நினைக்கணுமுன்னு எதிர்பார்க்கக் கூடாது. அப்படியே அவன் நினைச்சாலும் ஊரு நம்பாது. இந்தப் பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கிற எல்லா வாத்திச்சிகளையும் ஒரு மாதிரி பார்க்கிற ஊர்க்காரனுவ...அவன் வீட்டுக்குப் போற ஒன்னை, வாயில போடாம விட்டு வைப்பாங்களா? பார்வதி, மானேஜர் வீட்டு வாணலியில் கொதிக்க வைத்த எண்ணெய் மாதிரி கொதித்தாள். 'புறம் பேசற துக்கு ஊர்க்காரனுவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? எவ்வளவோ அநியாயம் நடக்கு... அதப் பாத்துட்டு இருக்கிற இவங்களுக்கு நல்ல வார்த்தை பேசறதுக்குக் கூட யோக்கியத கிடையாது.' நான்தான் சொல்லிட் டேனே காலத்தோட கோளா றுன்னு. கழுதய விடு. ஊர்க்காரங்களுக்கு யோக்கியதை இருக்கோ இல்லியோ, அவுங்க பேசுற வார்த்தைக்கு சரஸ்வதியோட கல்யாணத்த நிறுத்தற சக்தி இருக்கு. அப்படியே அவளுக்குக் கல்யாண ம் நடந்துட்டாலும், அவள் புருஷன் அவளை தள்ளி வைக்கதுக்கு சந்தர்ப்பம் கொடுக்கிற சக்தி அவங்க வாயில இருக்கு நான் சொல்றத அவள் கேட்டாக் கேட்கட்டும்! விட்டா விடட்டும்.' இதற்குள் இந்திரா அங்கே வந்துவிட்டாள். உடம்பு முழுவதையும் குலுக்காமல், தனி நடையாக நடப்பவள். மாநிறம் என்றாலும், நல்ல முகவெட்டு. சினிமாக்காரர் கள் எப்படி இவளை விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சீனிவாசன் இப்போது வேறுவிதமான வாய்பாட்டுக்கு வந்தார். நமக்கு நல்ல காலம், மானேஜ்மென்ட் ஆண்டவன் அருளால், தம்ம தங்கப்பாண்டிக்கு வந்துட்டு. ராஜலிங்கத்துக்குப் போயிருந்தா பள்ளிக்கூடத்துல கழுத மேயும். அல்லி ஆட்சிதான் நடக்கும். மேரிபுஷ்பம் அந்த