பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 81 ரெண்டு வார்தைக்கும் எதிர் அர்த்தமுள்ளவள். தங்கப் பாண்டி வழி வருமா? பாவம், முப்பதாயிரம் ரூபாய்க்கு என்ன பண்ணப்போறானோ? கடவுள்தான் வழி காட்டனும்!'" சரஸ்வதிக்கு, சற்று நேரத்திற்கு முன்புவரை, தக்க சமயத்தில் வழிகாட்டியவர்போலத் தோன்றிய அந்தக் கிழவர்மீது இப்போது வெறுப்பு ஏற்பட்டது. ஒரே நாக்கு...ஒரே சமயத்துல எப்படில்லாம் பேசுது. இந்தக் கிழவனவிட, அந்த இந்திரா எவ்வளவோ மேலு. இவரு, என்னைப்பற்றி ஊர்ல தப்பா பேசுறதா சொன்னது கூட தப்பாத்தான் இருக்கும்.' ஹரிஜனப் பெண் மாரியம்மாள் யோசித்தாள். இந்திராவிடம் மன்றாடி வேலையை மேற்கொண்டு தொடர முடியுமா என்று நினைத்தாள். பிறகு தேவடியா கிட்ட யாசகம் கேட்கிறது, தேலடியாளா மாறுறதுக்கு பேஸிக் பயிற்சி பெறுவது மாதிரி' என்று நினைத்துக் கொண்டவள் போல், இந்திராவை அலட்சியமாகப் பார்த் துக்கொண்டு நின்றாள். "எப்படியோ ஒரு வழியா முடிஞ்சுது...' என்ற குரலைக் கேட்டதும், எல்லோரும் நிமிர்நது பார்த்தார் கள் தங்கப்பாண்டி வருவது தெரிந்தது. ஊர்க்காரர் ஒரிரு வரின் கேள்விக்கு, அவர்களை லட்சியப்படுத்தாமலே பதிலளித்துக் கொண்டு, காரைக் கட்டிடத்திற்குள் அவர் நுழைந்தபோது, இந்திரா தவிர, மீதி எல்லோரும் அலறி அடிததுக்கொண்டு, விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை கள் பக்கமாகப் போனார்கள். தங்கப்பாண்டி, தனது நிர்வாக அறைக்குள் வந்து சுழல் நாற்காலியில் உட்கார்ந்து லேசாக ஆடிக் கொண் டார். அந்த அறையின் வாசல்பக்கம் தயாராக இருந்த ւլ.-6