பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சு சமுத்திரம் பதினெட்டு வயதுப் பெருமர்ள், மின்சார விசிறியை தட்டிவிட்டான். மானேஜரின் லதர் பேக்கை பெளவிய மாக வாங்கி, ரேக்கில் வைத்தான். இவன், அந்தப் பள்ளிக் கூடத்தில் பார்ட் டைம்" தையல் ஆசிரியன்; ஒன்பதாம் வகுப்பு பெயில்; சட்டையில் காசா போடத் தெரிந்தவன். 'லதர் பேக்கை' மானேஜர், தன்னிடம் கொடுத்ததில் இருந்து, அந்தப் பைக்குள் பணம் இல்லை என்பதும். ஆசிரியர்களுக்கு பைகள் கணக்காது என்பதையும் கணக்கெடுத்துக் கொண்டான். உடனே ஒடிப்போய் சீனிவாச ஆசிரியரிடம் விண்டுரைக்க நினைத்தவனைப் பார்த்து ஒரு தலவலி மாத்திர வாங்கியாடா' என்றார் தங்கப்பாண்டி. தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, தங்கப்பாண் டிக்கு எதிரே வந்து நின்று, அவர் கண்களை மறைக்கும்படி, அவர் கண்ணளவிற்குக் குனிந்து, கைகளைத் தூக்கி கும்பிடு போட்டுவிட்டு நின்றார். மானேஜர் உட்காரச் சொல்லவில்லை. தலைமைக்கு உட்காரப் பயம். ஒரு தடவை இப்படி உட்காரப் போனபோது, 'இப்ப என்ன ராமாயணமா நடத்தப் போறோம். அப்படியே நின்று விஷயத்தக் கேட்டுப்புட்டு போகாம...' என்று "கட் அண்ட் ரைட்டாக தங்கப்பாண்டி சொல்லி விட்டார். தலைமை ஆசிரியர் மாணி.ஆகையால் உட்கார வில்லை. விட்டில் பரமசாது மாதிரி, பதுங்கி உட்கார்ந்து இருந்த தங்கப்பாண்டி இப்போது சிங்கம் மாதிரி நிமிர்ந்து பார்த்தார். அது என்னமோ தெரியவில்லை...இந்த சுழல் நாற்காலியில் உட்கார்ந்ததும், அதுவும் இந்த தலைமை ஆசிரியரைப் பார்த்ததும் மானேஜருக்கு ஒரு மிடுக்கு வந்து விடும். போலீஸ்காரர் யூனிபாரத்தை போட்டதும் துள்ளுவாரே அப்படி. பேப்பர் வெயிட்டை எடுத்து, தன்