பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சு. சமுத்திரம் கந்தசாமிக் கிழவரும், தங்கப்பாண்டியும் சம்பந்தப் பட்ட விவகாரத்தைப் பேசிவிட்டு, சம்பந்தமில்லாத விவ காரங்களைப் பேசப்போனபோது, மணி நாலரை. நான்கு இருபதுக்கு மணியடித்து, பிள்ளைகள் போய்விட்டார்கள். ஆசிரிய-ஆசிரியைகள் காத்து இருந்தார்கள். ஒரு சில ஆசிரியர்கள் இடுக்கில் நின்றபடியே உள்ளே, எட்டிப் பார்த்தார்கள். சிலர் தண்ணிர் குடிக்க வருகிற சாக்கில் அந்தப் பக்கமாக வந்து, தலையைக் காட்டினார்கள். இந்திரா வாசல் பக்கமாக வந்து, தங்கப்பாண்டி யை விநோதமாகப் பார்த்தாள். உடனே அவர் 'சரி மாமா, மீதி விஷயத்தை நாளைக்குப் பேசிக்கிடலாம்' என்று சொல்லிவிட்டு நாற்காலியை விட்டு எழுந்தாலும், கிழவர் எழவில்லை. ஆகையால் தங்கப்பாண்டியே வெளியே வந்தார். இடுக்குக்குள் நின்றுகொண்டிருந்த ஆசிரியர்களைப் பார்த்து நேராகப் போனார். அவர்கள் சிலிர்த்து நின்றார் கள் தங்களைக் கூப்பிடாமல், அவரே வந்ததன் ஆபத் தைப் புரிந்துகொண்டார்கள். தங்கப்பாண்டி, அவர்களை சிங்கம்போலப் பார்த்து விட்டு கம்பீரமாகப் பேசினார்: 'இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கங்க. அடுத்தவாரம் தந்துடுறேன்.' சொல்லிவிட் டு திரும்பப்போன தங்கப்பாண்டியின் காதுகளில் விழும்படி, சீனிவாசன் பெளவியமாகக் கேட் டார்: 'நாளைக்கி என் மகள அனுப்பணும். மாரியம்மாள் வேற நாளைக்கி ஊருக்குப் போவணும். இல்லன்னா ஒங்ககிட்ட இருந்தா என்ன எங்ககிட்ட இருந்தா என்ன? பாதிப் பணத்தையாவது...' தங்கப்பாண்டி, அவர்களை தன் தம்பி ராஜலிங்கத் தின் கூறுகளாக நினைத்துக்கொண்டு, கூர்மையாகப் பேசினார்: "ஒரு வாரம் பொறுத்துக்கப்படாதா?